![]() |
ஷிம்லாவிற்கு சென்ற அவர்களை நகர முதல்வர் ஊர்மிளா சிங்,, முதலமைச்சர் பிரேம்குமார் துமால் மற்றும் அமைச்சர்கள் பலரும் ராஜ்பவனில் வைத்து வரவேற்றுள்ளனர். ஜனாதிபதி தற்போது ஒபரோய் குழுமத்தை சேர்ந்த வைல்ட் பிளவர் ஹோல் விருந்தகத்தில் தங்கியுள்ளார். அதேவேளை, பெரும்பாலான நேரத்தை பிரிட்டிஷ் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்களிலேயே ஜனாதிபதி செலவிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒபராய் விருந்தகம் அமைந்துள்ள பிரதேசத்திற்கு அண்மையில் உள்ள பர்ணஸ் கோட் என்ற கட்டிடம் வரலாற்று சிறப்பு மிக்கது என ரஜிவ் பின்டால் தெரிவித்துள்ளார். இந்திய மற்றும் பாக்கிஸ்தான் நாடுகளுக்கிடையில் கடந்த 1971 ம் ஆண்டு யுத்த நிறுத்த உடன்படிக்கை பர்னஸ் கோட்டில் வைத்தே கைச்சத்திடப்பட்டது. தற்போது அந்த கட்டிடம் ஷிம்லா நகர ஆளுநரின் வாசஸ்தலமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை, 1832 ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட இந்த கட்டிடம், அப்போதை ஆண்டு பஞ்சாப் ஆளுனர் லெப்டினட் சேர் லோயூஸ் டானேயின் வசித்துவந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில். ஒபராய் குழும விருந்தகம் அமைந்துள்ள பிரதேசத்திற்கு அருகில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா தங்கிச் செல்லும் ஒய்வுபெறும் சொகுசு இல்லமும் உள்ளது. இந்த இல்லம் பிரிட்டிஷ் இராணுவத்தின் முன்னாள் கட்டளைத் தளபதி ஒருவரின் வாசஸ்தலமாகவும் பயன்படுத்தப்பட்டமை விசேட அம்சமாகும். இந்திய சுதந்திர தினத்திற்கு பின்னர் இந்த கட்டிடம் இமாச்சல பிராந்திய சுற்றுலா அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் விருந்தகமாக செயற்பட்டு வருகிறது. இதனிடையே, 1992 ம் ஆண்டு தீவிபத்து ஒன்றையும் இந்த கட்டிடம் சந்தித்திருந்தது. கடந்த 1995 ம் ஆண்டு இந்திய அரசாங்கம் இந்த கட்டிடங்களை ஒபராய் குழுமத்திற்கு கையளித்துள்ள நிலையில், இது கடல் மட்டத்தில் இருந்து 8300 அடி உயரத்தில் அடர்ந்த வன சுற்றாடலுக்கு மத்தியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. |
Thursday, June 10, 2010
மஹிந்த ராஜபக்ச, இமாச்சல பிரதேசத்திற்கு சென்றுள்ளார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment