Wednesday, June 2, 2010

‘‘கண்மூடித்தனமான தாக்குதல்களை நிறுத்துங்கள். பேச்சுவார்த்தை மூலம் தீர்வைத் தேடுங்கள்.’’ இஸ்ரேலுக்கு சிங்கள அரசு அறிவுரை!!!

காசாவில் முற்றுகைக்குள் ஆளாகியிருக்கும் பலஸ்தீன மக்களுக்கு மனிதநேய வழங்கல்களை எடுத்துச் சென்ற கடற்கலம் மீது இஸ்ரேலிய படைகள் நிகழ்த்திய தாக்குதலுக்கு சிங்கள அரசு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.

இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் சிறீலங்கா வெளியுறவுத்துறை அமைச்சு, பலஸ்தீன மக்களுக்கு மனிதநேய வழங்கல்களை எடுத்துச் சென்ற கடற்கலம் மீது இஸ்ரேலிய படைகள் நிகழ்த்திய கண்மூடித்தனமான தாக்குதல் தங்களின் அரசாங்கத்திற்கும், நாட்டு மக்களுக்கும் ஆழ்ந்த கவலையை அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறான கண்மூடித்தனமான தாக்குதல்களை நிகழ்த்துவதை இஸ்ரேலியப் படைகள் நிறுத்த வேண்டும் என்றும், பேச்சுவார்த்தைகள் ஊடாகவே மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிரந்தரமான சமாதானத்தையும், பாதுகாப்பையும் ஏற்படுத்த முடியும் என்று தங்களின் அரசாங்கம் உறுதியாக நம்புவதாகவும் சிறீலங்கா வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழீழ மக்களுக்கு எதிரான யுத்தத்தில் இஸ்ரேலிய கிபீர் மிகையொலி யுத்த விமானங்கள், டோறா பீரங்கிக் கடற்கலங்கள், ஆளில்லா வேவு விமானங்கள் சகிதம் குடிசார் இலக்குகள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களை நிகழ்த்தி, கடந்த மூன்றரை தசாப்த காலப் பகுதியில் இரண்டரை இலட்சத்திற்கும் அதிகமான தமிழ் உயிர்களை நரபலி வேட்டையாடிய சிங்கள அரசு, தற்பொழுது சமாதானப் பேச்சுவார்த்தைகள் குறித்தும், கண்மூடித்தனமான தாக்குதல்கள் தொடர்பாகவும் இஸ்ரேலுக்கு அறிவுரை வழங்குவது ஓர் அரசியல் நகைமுரண் என்று அரசியல் அவதானிகள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

No comments:

Post a Comment