முல்லைத்தீவு மாவட்டத்தின் வைத்திய  கலாநிதி கைலாசதநாதன் சுதர்சன் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் வைத்து  கைதுசெய்யப்பட்டுள்ளார்.
 முல்லைத்தீவு மாவட்டத்தின் வைத்திய  கலாநிதியாக பணியாற்றிய சுதர்சன் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து  சிறீலங்காப்படையின் புலனாய்வாளர்களினால் கைதுசெய்யப்பட்டு 2ஆம் மாடி  வதைமுகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 வன்னியின் இறுதி போர் நடவடிக்கையில்  முல்லைத்தீவு மாஞ்சோலை மருத்துவமனையின் மருத்துவராக கடமையாற்றிய இவர்  பின்பு வவுனியாவிற்கு வந்து வதைமுகாம்களின் மருத்துவராக  கடமையாற்றியுள்ளார்.
 சிறீலங்காப்படையினரின் இறுதிக்கட்ட போரில்  பணியாற்றிய மருத்துவர் அனைவரும் கைதுசெய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ள  நிலையில் இவர் தனது பாதுகாப்பினை கருத்தில் கொண்டு சிங்கப்பூர்  சென்றுள்ளார்.
 சிங்குப்பூர் சென்ற இவர் அங்கிருந்து  சிறீலங்கா திருப்பிச்செல்ல முடியாத நிலையில் அதாவது சிறீலங்கா சென்றால்  சிறீலங்காப்படை கைதுசெய்யும் என்ற நிலையில் தமிழகத்திற்கு சென்றுள்ளார்.
 தமிழகம் சென்ற அவர் சிறீலங்காப்படையின்  புலனாய்வாளர்களின் தகவல்களின்படி கியூபிரிவு புலனாய்வாளர்களினால் கடுமையாக  விசாரிக்கப்பட்டு இனங்காணப்பட்டுள்ள நிலையில், ஒருநாள் மர்மமான முறையில்  கடத்தப்பட்டு கடுமையாக விசாரிக்கப்பட்டு நாட்டைவிட்டு வெளியேறுமாறு  வற்புறுத்தப்பட்டுள்ளார்.
 இவரது அனனத்து விபரங்களும் சிறீலங்காப்படை  புலனாய்வாளர்களுக்கு கியூபரிவு புலனாய்வால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள  நிலையில் தமிழகத்தில் இருந்து சிங்கப்பூரிற்கு கடந்த பத்து நாட்களுக்கு  முன்பு சென்ற இவரை தமிழகத்தின் கியூப்பிரிவினரால் சிங்கப்பூர்  காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டு, சிங்கப்பூர் விமான நிலையத்தில் வைத்து  இவர் நாடு கடத்தப்பட்டுள்ளார்.
 கொழும்பு கட்டுநாயக்கா விமானநிலையம் சென்ற  இவர் அங்கு சிறீலங்காப்படையின் புலனாய்வாளர்களினால் கைதுசெய்யப்பட்டு  தற்போது இரண்டாம் மாடி வதைமுகாமில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகளுக்கு  உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 முள்ளியவளை 3 ஆம் வட்டாரத்தை நிலையான  முகவரியாக கொண்ட இவர் தமிழ தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற  உறுப்பினர் ச.கனகரத்தினத்தின் நெருங்கிய உறவும் ஆவார்.
 ச.கனகரத்தினத்தின் மகனும்  சிறீலங்காப்படையினரின் புலனாய்வாளர்களினால் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில்  இவரும் வைதுசெய்யப்பட்டுள்ளமையானது தமிழ் மக்களை இனங்கண்டு கைதுசெய்யும்  நடவடிக்கைகளில் தமிழகத்தின் கியூப்பிரிவு புலனாய்வளர்கள் மற்றும்  சிங்கப்பூர் காவல்துறையின் புலனாய்வாளர்களுடன் சிறீலங்காப்படையின்  புலனாய்வாளர்களும் சேர்ந்து இயங்குகின்றமை வெளிப்படையாக  காணக்கூடியதாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 இன்நிலையில் பன்நாடுகளில் இருந்து தாயகம்  திரும்பும் ஈழத்தமிழ் மக்கள் மிகவும் விழிப்பாக செயற்படுமாறு  வேண்டுகின்றோம்.
 
No comments:
Post a Comment