Sunday, June 6, 2010

ஐஃபா திரைப்பட விழா முழுத் தோல்வியில்


தமிழர்களின் கடும் எதிர்ப்பைத் தாண்டி தலைநகர் கொழும்புவில் இந்திய சர்வதேச திரைப்படக் கழகமும்(IIFA), இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பும் (FICCI)யும் இணைந்து நடத்தில் ஐஃபா விருது வழங்கு விழாவும், அதனைத் தொடர்ந்து நடந்த வணிக மாநாடும் பெரும் தோல்வியில் முடிந்தது. இந்தி நடிகர்களில் பெரும்பாலோர் இந்த விழாவைப் புறக்கணித்தது மட்டுமின்றி, இந்த விழாவில் ஐஃபாவின் தூதராக நியமிக்கப்பட்ட சல்மான் கானும், விவேக் ஓபராயும் தங்களுடைய தனிப்பட்ட பகையை அங்கே வெளிப்படுத்தி முதல் நாள் கூத்தைக் கெடுத்தனர். இதனால் ஐஃபா விருது வழங்கு விழா முதல் நாளே களையற்றுப் போனது.

அடுத்த நாள் நடந்த உலக வர்த்தக மாநாடும் பெரும் நகைச்சுவையாகியுள்ளது. இந்த மாநாட்டிற்கு தலைமை விருந்தினராக வரவேண்டிய அதிபர் ராஜபக்சவின் மனைவி ஷிராந்தி இரண்டு மணி நேரம் தாமதமாக விழாவிற்கு வந்துள்ளார். இதனால் கடுப்பாகிப்போன இந்திய வணிகர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படையாகவே காட்டினராம். அதுமட்டுமல்ல, விழா இரண்டு மணி நேரம் தாமதமாக துவங்கியதால் அன்று மாலையே கொழும்புவிலிருந்து இந்தியா திரும்ப இருந்த வணிகர்கள் பலர் விமானத்தை இழந்தனர்.

இந்த விழாவின் மூலம் இலங்கையை மிகச் சிறந்த சுற்றுலா நாடாக காட்ட அந்நாட்டு அரசு மேற்கொண்ட முயற்சிதான் படுமோசமான தோல்வியானது என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சல்மான் கான் கலந்துகொண்ட ஆடை அலங்கார அணிவகுப்புதான் உற்சாகமில்லாமல் போனதாம். சல்மான் கான் பெரிய ஜோக்கரானது தான் பெரிய ஹைலைட் என்று கூறப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக நேற்று சிறிலங்கா கிரிக்கெட் அணிக்கும், இந்தி நடிகர்கள் அணிக்கும் இடையே ஏற்பாடான கிரிக்கெட் போட்டிதான் பெரும் கேலிக்கூத்தாக இருந்தது என்று செய்திகள் கூறுகின்றன. துவக்க ஆட்டக்காரராக ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்ச இறங்கியதைக் கண்டு ரசிகர்கள் கேலிக்குரல் எழுப்பினராம்.

மொத்தத்தில் சிறிலங்க அரசு 97 மில்லியன் ரூபாய் செலவிலும், ஃபிக்கியின் ஆதரவுடனும் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட ஜஃபா விழா பெரும் ஏமாற்றத்தில் முடிந்துள்ளது. இந்த விழாவை ஏற்பாடு செய்த விஸ்கிராஃப்ட் இண்டர்நேஷணல் சிக்கலுக்குள்ளாகியுள்ளது என்று பேசப்படுகிறது. அடுத்த ஆண்டு ஐஃபா விழா நடக்குமா, அத

No comments:

Post a Comment