Wednesday, June 2, 2010

போரின் இறுதி நாட்களின் தடயங்கள்-1



தமிழீழத்தில் போரின் இறுதி நாட்களில் புலிகள் தமது அனைத்து வளங்களையும் பாவித்திருந்தார்கள், அதில் ஒன்றுதான் கரும்புலித்தாக்குதல். குண்டு துளைக்காத மாதிரி உருமாற்றப்பட்ட வாகனங்களில் கரும்புலிகள் இராணுவத்தினரின் முகாம்களுக்குள் அதிவேகமாக சென்று திடீர் தாக்குதல் நடத்துவது. 1993 ம் ஆண்டென நினைக்கிறேன் இதேபோன்று மத்தியான நேரம் மட்டக்களப்பிலும் பஸ்சில் சென்று ராணுவ முகாமிற்குள் திடீரென ஊடுருவி வெற்றீகரமான தாக்குதலை நடத்தியிருந்தார்கள்..அதேபோன்று இத்தாக்குதலும் 7 ம் திகதி மாசி மாதம் புதுக்குடியிருப்புக்கு அண்மையாக நடத்தப்பட்டிருந்தது.ஆனால் ராணுவத்தினர் டாங்கிகள் கொண்டு இந்த வாகனத்தை தாக்கியதன் காரணத்தினால் இலக்கை சரியாக எய்த முடியாமல் போய்விட்டது.இப்போது அந்த வாகனத்தை ராணுவத்தினர் நினைவுதடயமாக பாதுகாத்து வருகின்றனர். எனக்கு பார்க்க கிடைத்த அந்த வாகனத்தை நிழல் படமூடாக உங்களிடம் சேர்ப்பிக்கின்றேன்.

* இந்த நிழல் படம் உரிய அனுமதி பெற்று எடுக்கப்பட்டது,இந்தப்பகுதி முல்லைத்தீவின் உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ளது.இதனை கொப்பி செய்து போடுபவர்கள் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல.


மேலும் மிகுதி அண்ணனின் நிலக்கீழ் பங்கர்,காட்டு மத்தியில் முகாம்களின் படங்கள் வரும் நாட்களில் வெளியிடப்படும்

No comments:

Post a Comment