![]() |
புலிகளின் குரல் வானொலி 18 ஆண்டு காலப்பணியை இன்று நிறைவுசெய்து 19 ஆவது ஆண்டில் நாளை வெள்ளிக்கிழமை காலடி வைப்பதனையொட்டிய ஒன்றுகூடல் இன்று நடைபெற்றது. புலிகளின் குரல் வானொலியின் ஒன்றுகூடல் நிகழ்வு மேலாளர் ப.கபிலன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், கலைபண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர் கவிஞர் புதுவை இரத்தினதுரை, சமாதான செயலகப் பணிப்பாளர் சீ.புலித்தேவன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினா். நிகழ்வில் புலிகளின் குரல் கலைஞர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. புலிகளின் குரல் வானொலி 21.11.90 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இன்று 18 ஆண்டுகால வரலாற்றை நிறைவுசெய்து நாளை 19 ஆவது ஆண்டில் காலடி வைக்கவுள்ளது. இதேநேரம், தமிழீழ மாவீரர் நாளையொட்டிய சிறப்பு ஒலிபரப்பினை புலிகளின் குரல் நாளை காலை தொடங்கவுள்ளது. அதிகாலை 5:00 மணிக்கு தொடங்கி இரவு 9:30 நிமிடம் வரை ஒலிக்கவுள்ளது. தமிழீழ மாவீரர் நாள் வரை இந்த சிறப்பு ஒலிப்பரப்பு நாள்தோறும் அதிகாலை 5:00 மணி தொடக்கம் ஒலிபரப்பாகவுள்ளது. |
Thursday, November 20, 2008
19 ஆவது ஆண்டில் காலடி பதிக்கும் புலிகளின் குரல் வானொலி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment