Wednesday, November 26, 2008

அனைத்துலகமே எதிர்பார்க்கும் மாவீரர் நாள் உரையில் தேசியத் தலைவர் சொல்லப்போவது என்ன?

அனைத்துலக சமூகத்தின் எதிர்பார்ப்புக்களை பெருமளவுக்கு ஏற்படுத்தியிருக்கும் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் மாவீரர் நாள் உரை இன்று மாலை இடம்பெறவுள்ளது.

மாவீரர் வாரத்தின் இறுதி நாளான இன்று வியாழக்கிழமை இடம்பெறப்போகும் இந்த உரையில் தலைவர் பிரபாகரன் என்ன சொல்லப் போகின்றார் என்பதை தாயகத்தில் வாழும் தமிழர்கள் மட்டுமன்றி, தமிழக தமிழர்கள், புலம்பெயர்ந்த தமிழர்கள் மற்றும் அனைத்துலக சமூகமும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றது.

தாயக மண் விடுதலைக்காக தம்முயிர்களை ஈகம் செய்த மாவீரர்கள் அனைவரையும் போற்றும் மாவீரர் நாள் உரையை தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் இன்று வியாழக்கிழமை நிகழ்த்தவுள்ளார்.

தாயக மண் விடுதலைக்காக தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கி வீரவரலாறான மாவீரர்கள் அனைவரையும் போற்றும் மாவீரர் நாள் தமிழீழ மக்களால் உணர்வெழுச்சியுடன் கடைப்பிடிக்கப்படுகின்றது.

மாவீரர்கள் அனைவரையும் போற்றும் இன்றைய தூய நாளில் மாவீரர் துயிலும் இல்லங்கள்-மாதிரித் துயிலும் இல்லங்கள்-மாவீரர் நினைவு இல்லங்கள்-ஒழுங்கமைக்கப்பட்ட இடங்களில் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

அதேவேளை, மக்களின் வதிவிடங்களிலும் மாவீரர்கள் போற்றப்படும் நிகழ்வு கடைப்பிடிக்கப்படவுள்ளது.

இந்த நாளில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள்

தாயக மற்றும் தமிழக நேரம் பிற்பகல் 5:40 நிமிடத்துக்கும்

அவுஸ்திரேலிய சிட்னி, மெல்பேர்ண் நேரம் இரவு 11:10 நிமிடத்துக்கும்

நியூசிலாந்து நேரம் அதிகாலை 2:10 நிமிடத்துக்கும்

கனடாவின் ரொறன்ரோ நேரம் காலை 7:10 நிமிடத்துக்கும்

ஐரோப்பிய நேரம் பிற்பகல் 1:10 நிமிடத்துக்கும்

பிரித்தானிய நேரம் பிற்பகல் 12:10 நிமிடத்துக்கும்

சிங்கப்பூர், மலேசிய நேரம் இரவு 8:10 நிமிடத்துக்கும்

மாவீரர் நாள் உரையை நிகழ்த்தவுள்ளார்.

தேசியத் தலைவர் அவர்களின் மாவீரர் நாள் உரையைத் தொடர்ந்து மாவீரர் நினைவொலி 6:05 நிமிடத்துக்கு எழுப்பப்படும்.

தொடர்ந்து 6:06 நிமிடத்துக்கு அகவணக்கம் இடம்பெறும்.

6:07 நிமிடத்துக்கு முதன்மைச்சுடரை தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் ஏற்ற, சமநேரத்தில் மாவீரர் துயிலும் இல்லங்களின் முதன்மைச் சுடர்களை தளபதிகள் ஏற்ற, மாதிரி மாவீரர் துயிலும் இல்லங்கள்-நினைவு இல்லங்கள்-ஒழுங்கமைக்கப்பட்ட இடங்களில் சுடர்கள் ஏற்றப்பட்டு வணக்கம் செலுத்தப்படவுள்ளது.

இதில் உலகத் தமிழினம் முழுமையாக கலந்து கொள்ளவுள்ளது.

தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரையினை தாயகத்தில் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கும் புலிகளின் குரல் வானொலியின் ஊடாகவும் அதன் இணையத்தளத்தின் ஊடாகவும் புலம்பெயர் நாடுகளில் ஒலி, ஒளிபரப்பாகும் அனைத்து தமிழ் வானொலிகளிலும் தொலைக்காட்சிகளிலும் அவற்றின் இணையத்தளங்களின் ஊடாகவும் உலகம் வாழ் தமிழர்கள் நேரடியாக கேட்டும் பார்த்துக் கொள்ளலாம்.

வானொலி மற்றும் தொலைக்காட்சியின் இணையத்தளங்கள் வருமாறு:

புலிகளின் குரல் வானொலி - www.pulikalinkural.com

லண்டன் ஐபிசி வானொலி - www.ibctamil.co.uk

கனடிய தமிழ் வானொலி - www.ctr24.com

ஐரோப்பிய தமிழ் வானொலி - www.tamilfm.eu

அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் - www.atbc.net.au

ரிவிஐ - www.tviondemand.com

ஐரோப்பிய தொலைக்காட்சி - www.eurotvlive.com

வளரி தொலைக்காட்சி - www.valary.tv

No comments:

Post a Comment