Sunday, November 23, 2008

நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு நல்ல நாள் பார்க்கும் மகிந்த



சிறிலங்கா நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலினை நடத்துவதற்கு சோதிடர்களிடம் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நல்ல நாள் கேட்டிருக்கின்றார் என்று கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அரசின் பக்கம் தாவிய 17 உறுப்பினர்களும் தற்போது நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டாம் என மகிந்தவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஆனால், தேர்தலை நடத்துவதா இல்லையா என்பது தொடர்பாக முடிவு எடுக்க முடியாத நிலையில் மகிந்த உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எனினும், நாடாளுமன்றத்தை கலைத்து புதிய தேர்தலினை நடத்துமாறும் சோதிடர்கள் மகிந்தவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளனர். அவர்கள் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு உகந்த நல்ல நாட்களாக டிசம்பர் 9, 13 மற்றும் 23 ஆகிய மூன்று நாட்களை குறித்து கொடுத்துள்ளனர்.

டிசம்பர் 9 நல்ல நாள் என மகிந்த தீர்மானித்துள்ளார்.

இதனிடையே, இந்த வருடத்தின் இறுதியில் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு அரசு தீர்மானித்துள்ளதாக அரசின் சில அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், சித்திரை புதுவருடத்திற்கு முன்னரே தேர்தலை நடத்தும் திட்டம் உள்ளதாக வேறு சிலர் தெரிவித்துள்ளனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment