Sunday, November 30, 2008

மூன்று தன்னார்வ தொண்டு நிறுவனங்களை வெளியேறுமாறு பணிப்பு

இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை இயல்பு நிலைக்கு மாற்றியமைக்கும் பணியில் ஈடுபட்ட வெளிநாட்டு அரச சார்ப்பற்ற நிறுவனங்களை வெளியேற்றுவதற்கான முயற்சியில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டதாக குற்றம் சாட்டி மூன்று வெளிநாட்டு அரசசார்பற்ற தொண்டு நிறுவனங்களை நாட்டைவிட்டு அனுப்பவுள்ளதாக பெயர் குறிப்பிடாத அரச உத்தியோகஸ்த்தர் ஒருவர் தெரிவித்தார்.

மனிதாபிமான பணியில் ஈடுபட்ட தொண்டு நிறுவனங்கள் வன்னி பகுதியில் விடுதலை புலிகள் பாதுகாப்பு அரண்களை அமைப்பதற்கு கனரக வாகனங்கள் மற்றும் உழவு இயந்திரங்களை வழங்கியுள்ளதாக அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

நோர்வே மக்கள் உதவி அமைப்பு (Norwegian Pepples's Aid ), நெதர்லாந்து போரூட் (FORUT), சோபா (ZOA), ஆகிய நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மக்களை சென்றடையவில்லை எனவும் தெரிவிக்கின்றனர். எனினும் இந்த நிறுவனங்கள் எக்காலப்பகுதியில் வெளியேற்றப்படவுள்ளார்கள் என்பது குறித்த எத்தகவல்களையும் வெளியிட மறுத்துள்ளனர்.

No comments:

Post a Comment