Monday, November 24, 2008

விசா பிரச்சனை தீர்ந்தது : லண்டன் புறப்பட்டார் வைகோ, லண்டன் புறப்பட்டார் வைகோ

லண்டனில், தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் உள்ள தமிழ் பேசும் எம்.பி.க்கள் பலர் இதில் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த அமைப்பின் சார்பில் வரும் 26ஆம் தேதி லண்டனில் மாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ளும்படி வைகோவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.



இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, பொடா நீதிமன்றத்தில் அனுமதி கோரியிருந்தார் வைகோ. பொடா கோர்ட்டும் வைகோ லண்டன் செல்ல அனுமதி வழங்கியிருந்தது. இதைத்தொடர்ந்து கடந்த 24ஆம் தேதி காலை அவர் சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டு செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் வைகோவுக்கு விசா கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் வைகோவுக்கு விசா மறுக்கப்பட்டதாக செய்தி பரவியது. இதுகுறித்து பிரிட்டிஷ் தூதரகம் சார்பில் யாரும் கருத்து தெரிவிக்கவில்லை.


எனினும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகச் பேசிவருவதால், வைகோவுக்கு விசா மறுக்கப்பட்டுள்ளதாக செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டது.

இந்த நிலையில் இன்று வைகோவுக்கு லண்டன் மாநாட்டில் கலந்துகொள்ள பிரிட்டிஷ் தூதரகம் விசா வழங்கியது. அதைத் தொடர்ந்து இந்திய நேரப்படி 24ம் தேதி இரவு 8.30 மணியளவில் சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்டார் வைகோ. ம.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் அவரை விமானநிலையம் சென்று வழி அனுப்பி வைத்தனர்.

No comments:

Post a Comment