Sunday, November 23, 2008

பிரபல தமிழ் அறிவிப்பாளர் விடுதலை



பிரபல தமிழ் அறிவிப்பாளரும் வெற்றி எஃப்.எம். வானொலியின் தமிழ் நிகழ்ச்சிப் பணிப்பாளருமான ரகுபதி பாலசிறீதரன் வாமலோசன் (லோசன்) இன்று சனிக்கிழமை பிற்பகல் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல் துறையினரால் கடந்த சனிக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்ட இவர், கடுமையான விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாக சந்தேகித்தே வாமலோசன் பயங்கரவாத தடுப்புப் பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment