Friday, November 14, 2008

விமானப்படை தலைமையகத்துக்குள் இருக்கும் உயர் அதிகாரிகள் புலிகளுக்கு ஆதரவு?






சீருடைகளை அணிந்து கொண்டு இராணுவ உத்தியோகத்தர்கள் ஆசனத்திலிருந்து இடைக்கிடை எழுந்து அங்கும் இங்கும் சென்று மேலும் மேலும் யுத்த நடைமுறைகள் பற்றி விசாரிப்பதைத் தவிர யுத்தத்தில் வெல்லக்கூடிய மார்க்கங்கள் பற்றி ஆராய்வதில்லை. இதனாலேயே யுத்தத்தில் வெற்றிபெறக்கூடிய ஒரு நபரைத் தேட வேண்டியுள்ளது. இவ்வாறு முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஏப்ரஹம் லிங்கன் ஒரு தடவை கூறியிருந்தார். இவ்வாறு பல ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவின் தென்பிராந்தியங்களில் செயற்பட்ட கலகக்காரர்களுக்கு எதிராக யுத்தத்தில் ஈடுபட்டிருந்த ஏப்ரஹம் லிங்கன் கூறியதொரு நிலைமைக்கே தற்போது நமது நாட்டிலும் ஜனாதிபதி முகம் கொடுத்திருப்பதாக விமர்சிக்கலாம்.

சாயல் கண்ணாடி அணிந்துகொண்டு எடுப்பாகச் செயற்பட்டுவரும் விமானப்படை உயரதிகாரிகள் புலிகள் இயக்கத்தினரின் சிலின் 143 ரக சிறிய விமானங்களை தாக்கி அழிப்பதற்காக ""நைற்விஷன்' (Nightvision instrument)இரவுத் தேடலுக்கான உபகரணம் தொடக்கம் சுப்பர் சொனிக் விமானங்கள் வரை பல்வேறு விமான வகை மற்றும் விமானப் பாதுகாப்பு உபகரணங்கள் கருவிகளை கொள்வனவு செய்யும்படி அரசைக் கோரியபோது உடனேயே அவர்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. ஆயினும், கடந்த நவம்பர் 4 ஆம் திகதி இரவு புலிகளின் விமானம் கொழும்பு வான் பரப்புக்குள் தாழ்வாகப் பறப்பதையும் அதற்கு மேலாக விமானப்படையின் எப்7 தாக்குதல் விமானம் ஒன்று பறப்பதையும் காட்டும் விமானப்படையின் வீடியோ காட்சியொன்றில் காட்டியிருப்பதால் விமானப்படையினர் செயற்படும் விதம் பற்றி அரச பாதுகாப்பு உயரதிகாரிகளுக்கு உறுதிப்படுத்த முடிந்துள்ளது.

குரும்பட்டி என ஒரு சிலரால் கூறப்பட்ட புலிகளின் விமானத்தின் பின்புறம் கூட மிகத்தெளிவாக மேற்படி வீடியோ இறுவெட்டுக் காட்சியில் காணக்கூடியதாக இருந்தது. மிகத் தாழ்வாகப் பறந்து சென்ற புலிகளின் விமானம் களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தின் மீது இரண்டு தடவைகள் மொத்தம் மூன்று விமானக் குண்டுகளை வீசிய அபூர்வமான காட்சியைக்கூட மேற்படி வீடியோ இறுவெட்டில் தெளிவாகக் காணக் கூடியதாக இருந்தது. அந்தப் புலிகளின் விமானத்தை வானத்தில் 11,000 அடி உயரம் வரை தாக்கக்கூடிய ஸ்ரெல்லா 2 வகை மிசைல்ஸ் ஏவுகணை மூலம் தாக்கி அழிக்கக்கூடிய இயலுமை விமானப் படைக்கு உண்டு. ஆயினும் இவ்வாறு 13 விநாடி நேரத்துக்குள் இயக்கித் தாக்கக்கூடிய இந்த ஸ்ரெல்லா 2 ஏவுகணை வசதி விமானப்படையிடம் இல்லாததற்குக் காரணம் விமானப்படை உயரதிகாரிகள் அவற்றை வாங்குவதற்கு அக்கறை காட்டாமல் அவை தேவையற்றது என்று மறுத்துவிட்டதாலே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறே ஸ்ரெல்லா மிசைல்ஸ் விமான அழிப்பு தீவிர செயற்பாடுகளைப் பயன்படுத்துவது மட்டுமன்றி ""எனரி மிசைல்' மிசைல் அழிப்புக்கான பிளேஸார் மற்றும் ஜேமர் கருவிகளைப் பயன்படுத்தும் முறைகூட சம்பந்தப்பட்ட விமானப்படை அதிகாரிகளால் ஒதுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் மற்றுமொரு பாரதூரமான சந்தேகமும் எழுந்துள்ளது. புலிகள் இயக்கத்தால் நடத்தப்பட்ட மொத்தம் எட்டு விமானத் தாக்குதல்களின் போதும் குறிப்பாக எட்டாவது தடவையாக கடந்த 4 ஆம் திகதி புலிகள் இயக்கத்தினர் நடத்திய விமானத் தாக்குதலின் போது கூட அவர்களின் சிறியரக சிலின் விமானங்களைத் தாக்கியழிக்க விமானப்படையினரால் முடியாமல் போய்விட்டது. தற்போது கிளப்பப்பட்டிருக்கும் சந்தேகத்திற்கேற்ப இவ்வாறு புலிகளின் விமானம்பற்றி கூடுதல் எச்சரிக்கையுடன் ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் இறுதியாக மிகக் தாழ்வாகப் பறந்து புலிகளால் மேற்கொள்ளப்பட்ட எட்டாவது சிலின் தாக்குதலின் போதும் அந்த விமானத்தைத் தாக்கி அழிக்காததற்கு காரணம் விமானப் படைத் தலைமையகத்திலேயோ அல்லது தலைமை அதிகாரிகள் மட்டத்திலேயோ புலிகளுக்கு ஆதரவான நபர் ஒருவரோ அல்லது சிலரோ இருக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் பாரதூரமான ஐயப்பாடு பற்றி விசேடமாக விமானப்படை திட்டமிடல் பிரிவில் நடக்கும் காரியங்கள் பற்றி கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டும். சில காலத்துக்கு முன் இவ்வாறு விமானப்படைத்தரப்பிலிருந்து புலிகளுக்குத் தகவல் கிடைத்ததாக ஒரு சந்தேகம் கிளப்பப்பட்டிருந்தது. அதாவது, விமானப்படை விமானங்கள் தாக்குதல் நடவடிக்கைகளுக்காக வன்னியை நோக்கிப் பறப்பதற்கு முன்னரே புலிகள் இயக்கத்தினர் அந்த நடவடிக்கைகள் பற்றி முன்கூட்டியே தகவல் அறிந்துகொண்டு அதற்கேற்ப தமது பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் அப்போது தெரிவிக்கப்பட்டது.

இதைப்போலவே அண்மையில் புலிகளின் விமானங்கள் கொழும்பு நோக்கித் தாக்குதல்களுக்காகப் புறப்பட்டு வரப்போவதாக முன்னரே அறிந்துகொண்டு அதற்கு எதிராகத் மிசைல்ஸ் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தாமல் இருக்கும்படியாக விமானப்படையில் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படுவதாகக் கருதப்படும் குறிப்பிட்ட அதிகாரி ஏற்பாடு செய்திருக்கக்கூடும்.

அதனால், தான் விமானப்படையினரிடம் ஸ்ரெல்லா 2 மிசைல்ஸ் ஏவுகணை இல்லாவிட்டாலும் அவர்களிடமிருக்கும் இக்லா மிசைல்ஸ் ஏவுகணைகளைப் பயன்படுத்திக்கூட புலிகளின் சிலின் விமானம் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என்று கருதப்படுகிறது.

மேலும், புலிகளின் விமானம் களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தின் மேல் வான்பரப்புக்கு வந்து குண்டுகளை வீசிவிட்டுத் திரும்பிச் செல்லும் வரையில் எம்.ஐ.24 யுத்த ஹெலிகொப்டர்கள் கூட அந்தப் பிரதேசத்துக்கு வரவில்லை. இவற்றின் அடிப்படையிலேயே விமானப்படை தலைமையகத்திலோ தலைமை அதிகாரிகள் மட்டத்திலேயோ புலிகள் இயக்க ஊடுருவல் நடந்திருக்கலாம் என்றும் புலிகளுக்கு ஆதரவாக விமானப்படை உயர்மட்டத்தில் புலிகளின் ஆதரவாளர் ஒருவர் செயற்படக்கூடும் எனவும் பாரதூரமான ஐயப்பாடு கிளப்பப்பட்டுள்ளதாக விமர்சக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திவயின பாதுகாப்பு விமர்சனம்: 09.11.2008

No comments:

Post a Comment