Wednesday, November 19, 2008

கொழும்பில் அல்ஹைடா ஆதரவு தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் ஆரம்பம்




ஸ்ரீலங்கா பாதுகாப்பு படையினர் தமது உயிரைத் தியாகம் செய்து வன்னிப் பிரதேசத்தை புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளிடமிருந்து விடுவிப்பதற்கான தீவிர இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் இந்தப் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இறுதிக் கட்டத்தில் தலைநகர் கொழும்பில் முஸ்லிம் இனத்தவர்களைச் சேர்ந்த தீவிரவாதிகளின் குழுவொன்று செயற்பட ஆரம்பித்திருப்பதாக பாதுகாப்பு புலனாய்வு பிரிவு கண்டுபிடித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு குறித்த இந்த முஸ்லிம் தீவிரவாதிகள் கொழும்பு நகரில் குண்டுத் தாக்குதல்கள், சூட்டுத் தாக்குதல்களை மேற்கொள்வதன் மூலம் தலைநகரில் குழப்பமான நிலைமை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவ்வாறு அவர்கள் மேற்கொண்ட தாக்குதல் முயற்சிகள் பற்றித் தற்போது தெரியவந்துள்ளதாகவும் புலனாய்வுப் பிரிவு தரப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அண்மையில் கொழும்பு புறக்கோட்டை மற்றும் தலைநகர்ப் பகுதிகளில் நிகழ்ந்த தாக்குதல்கள் பற்றி தீவிர விசாரணைகளை மேற்கொண்ட புலனாய்வு பிரிவினர் கைது செய்யப்பட்ட சில நபர்களிலிருந்து பெற்றுக்கொண்ட தகவல்களிலிருந்தும் மற்றும் குறிப்பிட்ட சில பிரதேசங்களில் மேற்கொண்ட சோதனை மற்றும் விசாரணை நடவடிக்கைகளிலிருந்தும் இவ்வாறு கொழும்பில் தீவிரவாத நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கும் இந்தக் குழுவினர் யார் என்று கண்டுபிடித்துள்ளனர்.

இவ்வாறு புலனாய்வுப் பிரிவு தரப்பில் வெளியாகியிருக்கும் தகவல்களுக்கேற்ப காஷ்மீரைப் பிரிப்பதற்காக காஷ்மீர் மற்றும் இந்திய பாகிஸ்தான் எல்லைகளில் பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்டிருக்கும் அல்ஹைடா இஸ்லாமியத் தீவிரவாத அமைப்பினதும் அதன் தலைவர் பின்லாடனதும் ஆதரவாளர்களான ஒரு குறிப்பிட்ட முஸ்லிம் தீவிரவாதிகள் அடங்கிய குழு ஒன்றே தற்போது இவ்வாறு கொழும்பில் தீவிரவாத நடவடிக்கைளில் ஈடுபட்டு வருவதாகத் தெரியவந்துள்ளது.

இந்த இஸ்லாமிய தீவிரவாதிகளே அண்மையில் அதாவது கடந்த வெள்ளிக்கிழமை 16 ஆம் திகதி கொழும்பில் மருதானைப் பகுதியில் அரசாங்கத்துக்கெதிரான ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கு செய்து ஜனாதிபதியின் உருவப்படத்தை எரித்துள்ளதாகவும் இந்த தீவிரவாதிகளின் கோரிக்கையின் பேரிலேயே அன்று மருதானை புறக்கோட்டை மற்றும் பகுதிகளில் கடைகள் பூட்டப்பட்டு அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாகவும் மேலும் புலனாய்வுப் பிரிவுக்குத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும், இந்தக் குறிப்பிட்ட இஸ்லாமிய தீவிரவாதக் குழுவினர் பின்லாடனின் அல்ஹைடா குழுவின் ஆதரவாளர்கள் என்பதற்கும் மேலும் குறித்த இஸ்லாமிய தீவிரவாதத்தை ஆதரிக்கும் ஒரு தரப்பினரிடமிருந்து இவர்களுக்கு நிதி உதவிகள் வழங்கப்பட்டு வருவது பற்றியும் நிரூபிப்பதற்கான தகவல்களை கண்டுபிடித்துவிட்டதாக சிரேஷ்ட புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

திவயின: பாதுகாப்பு விமர்சனம்: 16.11.2008

No comments:

Post a Comment