Wednesday, November 19, 2008

தமிழக நிவாரண பொருட்கள் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிப்பு



தமிழகத்தில் சேகரிக்கப்பட்டு கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட நிவாரண பொருட்கள் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலமாக நாளை மறுநாள் சனிக்கிழமை வன்னிக்கு அனுப்பி வைக்கப்படும் என்று இந்திய தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன.

கொழும்பில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் நாளை நிவாரணப் பொருட்களை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிகளிடம் கையளிப்பர் என தெரிவிக்கப்படுகின்றது.

உணவு மற்றும் மருந்து அடங்கிய 1,600 மெற்றிக்தொன் பொருட்கள் தமிழகத்தில் இருந்து கடந்த திங்கட்கிழமை கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது.

அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை இந்திய தூதுவர் ஆலோக் பிரசாத் சந்தித்து நிவாரண பொருட்களை துறைமுகத்திற்கு வெளியே கொண்டு வருவதற்கான நடடிவக்கைகளை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment