Sunday, November 23, 2008

ஓமந்தையில் நோயாளர் காவு வாகனத்தினை திருப்பியனுப்புவதால் பெரும் நெருடிக்கடி: மருத்துவர் பிறைற்றன்



வவுனியா மாவட்டத்தில் உள்ள சிறிலங்கா படையினரின் ஓமந்தை சோதனைச் சாவடியில் நோயாளர் காவு வாகனத்தை திருப்பியனுப்புவது பெரும் நெருக்கடியினை உருவாக்கியுள்ளது என்று தருமபுரம் மருத்துவமனையின் பதில் பொறுப்பு மருத்துவர் பிறைற்ரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது:

தருமபுரம் மருத்துவமனையில் இருந்து புறப்படும் நோயாளர் காவு வாகனம் புதுக்குடியிருப்பில் உள்ள அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினரின் வழித்துணை அனுமதி பெற்று பயணத்தில் ஈடுபடும்போது ஓமந்தை சோதனைச் சாவடியில் நோயளர் காவு வாகனத்தை சிறிலங்கா படையினர் திருப்பியனுப்புகின்றனர்.

வாகனம் திரும்பி எமது மருத்துவமனையை வந்தடைவது எமக்கு பெரும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது. ஆபத்தான நிலையிலேயே நோயாளர்களை வவுனியாவிற்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்புகின்றோம்.

நோயாளர் காவு வாகனம் திரும்பி வரும்போது உயிரிழப்புக்கள் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment