Thursday, November 20, 2008

இரு தரப்பினரதும் இணக்கப்பாட்டுடன் ஓர் சோதனைச் சாவடி அமைக்கப்பட வேண்டும் - ICRC

இரண்டு தரப்பினரதும் இணக்கப்பாட்டுடன் ஓர் சோதனைச் சாவடி அமைக்கப்பட வேண்டும் என சர்தேச செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளும், இலங்கை அரசாங்கமும் சிவிலியன் பாதுகாப்பை உச்ச அளவில் உறுதிப்படுத்தக் கூடிய ஓர் பாதை குறித்து உத்தரவாதமளிக்க வேண்டும் என அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

குறிப்பாக அம்பியூலன்ஸ்கள், உணவு நிவாரணப் பொருள் கொல்கலன்கள், மோதல்களில் உயிரிழந்தவர்களின் சடல பரிமாற்றம் போன்றவற்றுக்கு பாதுகாப்பான ஓர் சோதனைச் சாவடி அவசியம் என சர்தேச செஞ்சிலுவைச் சங்கத்தின் இலங்கைக் கிளைத் தலைவர் போல் கெஸ்டெல்லா தெரிவித்துள்ளார்.

சோதனைச் சாவடி இயங்கும் நேரம், பாதைகள் குறித்து இரண்டு தரப்பினரும் தெளிவான இணக்கப்பாட்டுடன் செயற்படுவது இன்றியமையாததென அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 18ம் திகதி முதல் ஓமந்தையில் இயங்கி வந்த சோதனைச் சாவடியின் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக வன்னிப் பிரதேச சிவிலியன்கள் பெரும் இடர்பாடுகளை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான மத்தியஸ்தத்தில் - ICRC:

ஓமந்தை சோதனைசாவடிக்கு பதிலாக மாற்று இடம்மொன்றில் சோதனைச் சாவடியை ஏற்படுத்துவது குறித்து பரிந்துரைப்பதற்காக அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் தமது அமைப்பு மத்தியஸ்தத்தில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் ஊடக அதிகாரி சரசி விஜேகோன் தெரிவித்துள்ளார்.

அரசாங்க கட்டுப்பாட்டு பகுதியையும் விடுதலைப்புலிகளின் பகுதிகளையும் இணைக்கும் ஒரே ஒரு சோதனை சாவடியாக ஓமந்தை சோதனைசாவடி இருந்து வருகிறது.இந்த சோதனைச்சாவடியில் தற்போதை நிலைமைகள் குறித்து கேட்டபோதே விஜேகோன் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைகாரணமாக பாதுகாப்பு கருதி ஓமந்தை சோதனை சாவடியின் நடு நிலைப்பணியில் தமது பிரதிநிதிகள் ஈடுபடவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், 18ஆம். 19ஆம் திகதிகளில் 42 நோயாளர்களை சோதனை சாவடி ஊடாக அழைத்துச் சென்றுள்ளதாகவும் இரண்டு தரப்பினரின் அனுமதியுடன் 18 சடலங்களை விடுதலைப்புலிகளிடம் கையளித்துள்ளதாகவுத் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடக அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்

No comments:

Post a Comment