Sunday, November 30, 2008

புலிகளின் தாக்குதலில் ஆழ ஊடுருவும் அணியின் கட்டளைத் தளபதி மேஜர் லலித் ஜெயசிங்க பலி!

விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சிறீலங்கா ஆழ ஊடுருவும் அணியின் கட்டளைத் தளபதியான மேஜர் லலித் ஜெயசிங்க கொல்லப்பட்டார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மையில் ஒட்டுசுட்டான் பகுதியில் நாசகாரத் தாக்குதலை நடத்த வந்த மேஜர் லலித் ஜெயசிங்க தலைமையிலான 8 அடங்கிய ஆழ ஊடுவுரும் அணியினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் அவர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த தளபதியை காவிக்கொண்டு பிறிதொரு மறைவிடத்தில் வைத்து குறித்த தளபதிக்கு காயத்திற்கு கட்டுப்போட்டு சிகிற்சை அளித்துக்கொண்டிருந்த போது, மீண்டும் விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகி அவர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னியின் பல பகுதியில் லலித் ஜெயசிங்க தலைமையிலான ஆழ ஊடுருவும் அணியினர் நாசகாரத் தாக்குதலை நடத்தி பலரின் உயிரை காவுகொண்டனர். இதற்காக சிறீலங்கா இராணுவத்தில் வழங்கப்படும் மிகவும் உயர்ந்த விருதான "வீர விக்கிரம விபூசன" விருதையும், ஏனைய பல விருதுகளையும் மேஜர் ஜெயசிங்க பெற்றிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment