Monday, November 24, 2008

விமல் வீரவன்சவை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கும்படி ஜே.வி.பி. வேண்டுகோள்


தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச உட்பட அக்கட்சியின் உறுப்பினர்கள் 10 பேரை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கும்படி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிடம் மக்கள் விடுதலை முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மீறும் வகையில், இவர்கள் செயற்பட்டுள்ளனர் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

இதனால் விமல் வீரவன்ச உள்ளிட்ட பத்து பேரை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பொதுச் செயலாளர் சுசில் பிரேம ஜயந்தவிடம் ரில்வின் சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2004ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கதாகும்

No comments:

Post a Comment