Wednesday, November 26, 2008

மட்டக்களப்பில் முடக்கப்பட்டு வரும் "அப்பாச்சி குறூப்"





மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் இடம்பெற்ற கிளேமோர் தாக்குதலில் மோட்டார்சைக்கிளில் பயணித்த இரண்டு இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

இது தொடர்பான செய்திகள் சகல ஊடகங்களிலும் வெளிந்திருந்தன. ஆனால் இந்தக்கொலைபற்றிய திடுக்கிடும் தகவலொன்றை இப்பொழுது தருகின்றோம்.


மட்டக்களப்பு நகருக்குள் ஊடுருவியுள்ள சுமார் நுற்றுக்கும் மேற்பட்ட விடுதலைப்புலிகளின் புலனாய்வுப்பிரிவினரை தேடியழிக்கும் முகமாக கடந்த 4 மாதங்களுக்கு முன் மட்டக்களப்பிலுள்ள இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த சிலராலும், புளொட் உறுப்பினர்கள் சிலரைக் கொண்டும் ஒரு மோட்டார் படையணி அமைக்கப்பட்டது. கறுப்பு நிற 6 அப்பாச்சி மோட்டார் சைக்கிள்களைக் கொண்ட இந்தப் படையணியில் இருவர் வீதமாக 12 பேர் அங்கம் வகித்தனர். நன்கு பயிற்றப்பட்ட இராணுவப் புலனாய்வுப் பிரிவைச்சேர்ந்தவர்களும் இதெற்கென தயார்படுத்தப்பட்ட புளொட் உறுப்பினர்கள் சிலரும் இதில் உள்ளடங்கியதாக இப்படையணி உருவாக்கப்பட்டது. இப்படையணிக்கு மட்டக்களப்பு போதனாவைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள புளொட் அலுவலகத்திலிருந்த புளொட் ராஜன் என்பவர் பொறுப்பாக இருந்தார்.

இதிலுள்ள விசேட அம்சம் என்னவென்றால் இப்படையணிக்குத் தேவையான சகல பராமரிப்புச் செலவுகளையும். ர்p.எம்.வி.பி யினரே ஏற்றுக்கொண்டிருந்தனர். பிள்ளையானின் ர்p.எம்.வி.பியினருக்கு அரசாங்கத்தினால் ஒதுக்கப்படும் சுமார் இரண்டரைக்கோடி ரூபா நிதியிலிருந்து ஒருதொகைப்பணம் இப்படையணிக்கு வழங்கப்பட்டுக்கொண்டிருந்ததாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 3 மாதங்களுக்கு முன்னர். இந்த மோட்டார் சைக்கிள் படையணியான "அப்பாச்சி குறூப்புக்கு" பொறுப்பாக இருந்த புளொட் ராஜன் வந்தாறு மூலை செங்கலடி பிரதேசத்தில் வைத்து விடுதலைப்புலிகளின் புலனாய்வுப் பிரிவினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்குப்பின்னர் இப்படையணி சிலகாலம் முடங்கியிருந்த பின்னர் மீண்டும் தமது கைவரிசையை காட்ட ஆரம்பித்தது.

மட்டக்களப்பு நகர வீதிகளில் மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை 7 மணிக்குப் பின்னர் வலம்வரும் இவர்கள் வீதிகளில் நடமாடும் இளைஞர்களை விசாரணைசெய்து துன்புறுத்துவதுடன் மக்கள் முன்னிலையில் வைத்து கடத்திக்கொண்டு செல்வதை இந்த அப்பாச்சி குறூப் வழக்கமாகக் கொண்டிருந்தது. இதனால் மட்டக்களப்பு மக்கள் அப்பாச்சி குறூப் என்றால் பயந்து நடுங்கினர். கறுப்புநிற தலைக்கவசத்துடனும், கரிநிற உடைகளுடன் அப்பாச்சி மோட்டார்சைக்கிள்களில் தொடராக இவர்கள் வலம்வரும்போது. யாராவது குறுக்கே சென்றால் அவர் தாக்கப்பட்டு காயங்களுக்குள்ளாக்கப்படுவது வழமையாக நடைபெற்றுவந்த ஒரு விடையம்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் பட்டிருப்புப்; பகுதியில் இந்த குறூப்பைச்சேர்ச்த இருவர் மோட்டார் சைக்கிளுடன் விடுதலைப்புலிகளின் புலனாய்வுப் பிரிவினரால் கடத்திச்செல்லப்பட்டிருந்தனர்.

கடந்த மாதம் சிந்தாண்டிப் பகுதியில் இவர்கள் கடத்தல் ஒன்றுக்காக வேகமாக சென்றபொழுது இருவர் மரத்துடன் மோதுண்டனர். ஒருவர் அவ்விடத்திலேயே உயிரிழந்தார். மற்றவர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் பொலநறுவைக்குக் கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார்.

பின்னர் இன்று களுவாஞ்சிக்குடி எருவில் கோடைமேடு பகுதியில் குளக்கட்டு வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது நடத்தப்பட்ட கிளோமோர் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். தற்பொழுது இந்த அப்பாச்சி குறூப்பில் 6 பேரே மீதமாக உள்ளதாகவும் இக்குழுவுக்கு மேலதிகமாக ஆட்களைச்சேர்ப்பதற்கு கருணாகுழுவைச்சேர்ந்தவர்கள் இணைக்கப்படவுள்ளதாகவும் முக்கிய தகவலொன்று தெரிவிக்கின்றது.

No comments:

Post a Comment