![]() |
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் அதற்கான தீர்வுத்திட்டத்தினை நிறைவு செய்வதற்கு விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்களை நடத்துவதற்கு அரசாங்கம் தயாரில்லை எனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் பேச்சுக்களை தொடங்க வேண்டும் எனவும் மகிந்தவிடம் மன்மோகன் சிங்க் தெரிவித்துள்ளார். இதனிடையே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை விரைவில் அழைப்பதாக இந்தியப் பிரதமரிடம் மகிந்த தெரிவித்தார். எனினும், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்களை வெளியேற்றும் பொருட்டு நாடாளுமன்றத்தை கலைத்து புதிய தேர்தல் ஒன்றினை நடத்துமாறு ஜே.வி.பியிலிருந்து பிரிந்து சென்று அரசில் இணைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். |
Sunday, November 23, 2008
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசுமாறு அழுத்தம் கொடுத்த மன்மோகன் சிங்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment