Thursday, November 20, 2008

மன்னாரிலும் சிங்கள வைத்தியர்கள் வெளியேற்றம்!


மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக மன்னார் மாவட்டத்தில் பணியாற்றிய ஆறு சிங்கள வைத்தியர்கள் கடமையில் இருந்து மாவட்டத்தை விட்டு வெளியேறியுள்ளார்கள்.

அண்மையில் மட்டக்களப்பு பகுதியில் சிங்கள வைத்தியர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து தமக்கு பாதுகாப்பு இல்லையென கருதி மன்னார் மாவட்டத்தில் பணியாற்றிய ஆறு வைத்தியர்கள் எழுத்து மூலமான அறிவித்தலை உயர் அதிகாரிகளுக்கு வழங்கி மன்னாரை விட்டு வெளியேறி உள்ளனர்.

இதில் நான்கு வைத்தியர்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையிலும், பேசாலை வைத்தியசாலையில் பணியாற்றிய வைத்தியர் ஒருவரும், மலேரியா தடுப்பு பிரிவில் பணியாற்றிய வைத்தியர் ஒருவருமே இவ்வாறு வெளியேறியுள்ளனர். இதனால் வைத்தியசாலையின் பணிகள் மந்த கதியிலேயே இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment