Monday, November 24, 2008

"பாரிய பதிலடித் தாக்குதலை நடத்துகின்றனர் புலிகள்- 27 படையினர் பலி- 70 பேர் படுகாயம்": அதிகாரபூர்வமாக ஒப்புக்கொண்டது சிறிலங்கா



கிளிநொச்சி நோக்கிய முன்நகர்வு சமரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பாரிய பதிலடித் தாக்குதலில் சிறிலங்கா படைத்தரப்பில் 27 பேர் கொல்லப்பட்டதாகவும் 70 பேர் படுகாயமடைந்ததாகவும் அவர்களில் சிலர் மீண்டும் படையணிகளில் இணைய முடியாத நிலையில் உள்ளதாகவும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு, அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
"புதுமுறிப்புக்குளம் மற்றும் தென்முறிகண்டி பகுதிகளில், ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் விடுதலைப் புலிகள் மேற்கொண்டு வரும் பாரிய பதிலடி நடவடிக்கைக்கு 57ஆம் படையணி உள்ளானது. இதில் படைத்தரப்பில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 70 பேர் படுகாயமடைந்துள்ளனர். 70 பேரில் 35 பேருக்கு சிறு காயங்களும் மேலும் சிலர்- மீண்டும் படையணிக்குத் திரும்ப இயலாத நிலையில் காயமடைந்தும் உள்ளனர்" என்று சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment