Wednesday, November 19, 2008

நாயாற்றில் கடற்படை கொமாண்டோ அணியினரின் தாக்குதல் முறியடிப்பு: மூன்று அதிவேகப் படகுகள் சேதம்

சிறீலங்கா கடற்படை கொமாண்டோ அணியினரின் தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. நாயாறு கறுப்புமுனை நோக்கி சிறீலங்கா கடற்படைக் கொமாண்டு அணியினர் தாக்குதலை நடத்துவதற்காக விரைவுக் கடற்கலங்களுடன் தாக்குதலை தொடுத்துள்ளனர்.

இன்று செவ்வாக்கிழமை காலை 6 மணியளவில் இரு அதிவேக நீருந்து விசைப்படகு மற்றும் 12 அதிவேகப் படகில் வந்த சிறீலங்கா கடற்படைக் கொமாண்டோ மீது கடற்புலிகள் தாக்குதல் அணி எதிர்த்தாக்குதலை நடத்தி கடற்படையினருக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

45 நிமிட நேரம் கடற்பரப்பில் கடும் மோதல்கள் இடம்பெற்றன. இதன்போது சிறீலங்கா கடற்படைக்குச் சொந்த மூன்று கடற்கலன்கள் கடுமையாகச் சேதமாக்கப்பட்டன.

சிறீலங்காக் கடற்படையினருக்கு ஆதரவாக ஆட்டிலறி எறிகணை மற்றும் எம்.ஜ 24 யுத்த உலங்கு வானூர்தி தாக்குதலைத் சிறீலங்காப் படையினர் தொடுத்துள்ளது போதும் கடற்புலிகளின் அணிகளின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாத சிறீலங்காக் கடற் கொமாண்டோக்கள் இழப்புகளை அடுத்து அங்கிருந்து ஓட்டமெடுத்தன.

No comments:

Post a Comment