Wednesday, November 19, 2008

பூநகரியில் புலிதேடும் படலம்.....




ஆமிக்காரனும் சட்டம்பியாரும்
கேள்வியாயும் பதிலாயும் ஒரு கவிதை

ஜயா....ஜயா ... நில்லு..நில்லு.!
சந்தியிலே புலி நிக்கா சொல்லு.. சொல்லு !
அந்த வழில புலி கண்டிய... ...?


ஒமோம்.. தம்பி... ஒமோம்.
அந்த வழியிலே புளி நிக்கு
கனக்க கனக்க காச்சு கிடக்கு..!


இல்ல இல்ல மாத்தய ..!
கொட்டியா... கொட்டியா கண்டியா..!


ஒமோம்..ஒமோம்
கொட்டயோட தான் நான் கண்டேன்
இனி கோதுடச்சு ...
கொட்டயெடுத்து...
கொழும்புக்கு அனுப்பலாம் நீங்கள்...


டேய்..ஜயா.. உனக்கு காது கேட்காத..?
மாத்தய..நீ போடா போட..!
நான் அந்த ஜயாட்ட கேக்கிறன்...


தம்பிகளா..
நான் மனதுக்குள்ள சொல்லுறன்
புலி தேடவந்த
பொன்சேகவின் தம்பிகளே
அவங்கள் நீங்கள் தேடி வராங்கள்
அவங்களாவே வருவாங்கள்
முடிஞ்சாய் தடுத்திடுங்கோ
இல்லாட்டி முழங்கால் தெறிக்க ஓடிடுங்கோ..
சரி தம்பிமார் நான் வரட்டா..?


சரி போ மாத்தயா..
கொட்டியா வந்தா சொல்லு..!

No comments:

Post a Comment