![]() |
இதுவரை காலமும் மதவச்சி வரையில் பயணம் செய்த ரயில் போக்குவரத்து சேவை நேற்றைய தினம் முதல் அனுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களை கருத்திற் கொண்டு வடக்கிற்கான ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் தின நிகழ்வுகளின் போது ஏற்படக்கூடிய ஆபத்துக்களை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வவுனியா ஈரப்பெரியங்குளம், மதவச்சி ஆகிய சோதனைச் சாவடிகளின் ஊடாக தமிழர்கள் போக்குவரத்து செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. விசேட காரணங்களுக்காக குறித்த சோதனைச் சாவடியூடாக பயணம் செய்வோர் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்படுவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. ரயில் போக்குவரத்தில் ஏற்படுத்தப்பட்ட திடீர் மாற்றம் காரணமாக அனுராதரபுர பஸ் தரிப்பிடத்தில் பெரும் எண்ணிக்கையிலான பயணிகள் அலை மோதுவதாகக் குறிப்பிடப்படுகிறது. |
Wednesday, November 19, 2008
பாதுகாப்பு காரணங்களுக்காக வடக்கிற்கான ரயில் சேவையில் வரையறைகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment