Wednesday, November 19, 2008

ஐ.நா.வின் அங்கீகாரம் பெற்ற 'தமிழ் லீக்' அமைக்க முயற்சி. - மலே.இந்திய காங். இளைஞர் அணி

இலங்கைத் தமிழர்களின் அவல நிலை தொடர்பாக சர்வதேசத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக 'தமிழ் லீக்' ஒன்றை அமைக்கும் யோசனையை மலேசிய இந்திய காங்கிரஸின் இளைஞர் அiணி முன் வைத்துள்ளது.

இந்த அமைப்பானது இஸ்லாமிய மாநாட்டு அமைப்பு போன்று ஐ.நா.வின் அங்கீகாரம் பெற்ற அமைப்பாக இருக்க வேண்டும் என்று இதன் ஆலோசகர் வேல்பாரி தெரிவித்துள்ளர்.

இந்த தமிழ் லீக்கானது தமிழ் நாட்டில் உருவாக்கபட வேண்டும். அத்துடன் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் அரசியல், பொருளாதார, சமூக நிகழ்ச்சித் திட்டங்களை விழிப்புடன் பாதுகாக்கும் வகையில் இது உருவாக்கப்பட வேண்டும் என்று வேல்பாரி கூறியுள்ளார். ஐ.நா.போன்று தமிழ் லீக்கானது கட்டமைப்பையும் இராஜதந்திர ரீதியான அந்தஸ்த்தையும் கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொரு உறுப்பு நாடுகளின் தமிழ் பிரதிநிதிகளுக்கும் இராஜதந்திரிகளுக்கான சிறப்புரிமையுடன் கூடிய தூதுவர் பதவி வழங்கப்பட வேண்டும். என்று வேல்பாரி கூறியதாக 'த ஸ்ரார்' பத்திரிகை குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் விடுதலைப் புலிகளின் பிரதிநிதித்துவத்திற்கும் இது உத்தியோகபூர்வ அங்கீகாரம் வழங்கக்கூடியதாக இருக்க வேண்டும்; இந்த தமிழ் லீக்கின் அமர்வில் அவர்கள் கலந்து கொண்டு தமது கரிசனைகள், துன்பங்களை எந்தவிதமான அச்சமுமின்றி தெரிவிக்கக்கூடியதாக இருக் வேண்டும் என்றும் வேல்பாரி கூறியுள்ளார்.

அத்துடன் சமாதானத் தீர்வுக்காக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் கலந்துரையாடவும் இந்த 'தமிழ் லீக்'; குழுவொன்றை அமைக்க முடியுமெனவும் வேல்பாரி கூறியுள்ளார்.

நன்றி : தினக்குரல்

No comments:

Post a Comment