Thursday, November 20, 2008

இலங்கைத் தமிழர் நிவாரண நிதி கருணாநிதி பெற்றுக்கொள்வது நிறுத்தம்




இலங்கையில் நடக்கும் போரால் அங்குள்ள தமிழர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் துயர் துடைக்கும் வகையில் நிவாரணப் பொருட்கள், நிதி ஆகியவற்றை வழங்க வேண்டும் என்று தமிழக மக்களுக்கு முதலமைச்சர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்தார்.

அதனடிப்படையில் கடந்த அக்டோபர் 28 ஆம் திகதி முதல் நிவாரண நிதியை மக்கள் வழங்கத் தொடங்கினர். முதலாவதாக முதலமைச்சர் கருணாநிதி தன் பங்காக தலைமைச் செயலாளர் ஸ்ரீபதியிடம் ரூ. 10 இலட்சம் கொடுத்தார். அதைத் தொடர்ந்து அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், அரச அலுவலர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் நிவாரண நிதி வழங்கினர்.

கடந்த 23 நாட்களாக நிவாரண நிதியை கருணாநிதி வாங்கினார். இதுவரை 24 கோடியே 70 இலட்சத்து 87 ஆயிரத்து 939 ரூபாய் நிவாரண நிதியாக வந்துள்ளது. இந்த நிலையில் கருணாநிதி தனது அலுவலகத்தில் நிவாரணநிதி பெறுவது 19 ஆம் திகதியோடு நிறுத்தப்படுவதாக அவரது அலுவலகம் அறிவித்தது.

இனிமேலும் நிதி வழங்க யாராவது விரும்பினால், அதை நேரடியாக தலைமைச் செயலாளர் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment