Wednesday, November 19, 2008

குற்றமற்றவரென நிரூபிக்கப்பட்டால் லோஷன் விடுவிக்கப்படுவார்-ஊடகத்துறை அமைச்சர் கூறுகிறார்


தற்கொலைக் குண்டுதாரியுடன் தொடர்பு வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரிலேயே வெற்றி எப்.எம். நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் ஏ.ஆர்.வி. லோஷன் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றமற்றவரென நிரூபிக்கப்பட்டால் லோஷன் விடுவிக்கப்படுவார் என்று ஊடக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து அமைச்சர் மேலும் கூறியதாவது,கடந்த அக்டோபர் நான்காம் திகதி கைது செய்யப்பட்ட பயங்கரவாத பிரிவை சேர்ந்த ஒருவரிடமிருந்து இரண்டு சயனைட் வில்லைகளும் தற்கொலை அங்கியொன்றும் கைப்பற்றப்பட்டிருந்தன. மேற்படி பயங்கரவாத பிரிவைச் சேர்ந்த நபர் மற்றும் மேலுமொரு சந்தேக நபரான சரவணன் ஆகியோரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னணியிலேயே வெற்றி எப்.எம் இன் பொது முகாமையாளர் ஏ.ஆர்.வி. லோஷன் கைது செய்யப்பட்டுள்ளதாக பயங்கரவாத புலனாய்வு பிரிவு பொலிஸார் எமக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள லோஷன் தொடர்ந்தும் விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளார். பக்க சார்பற்றதும் நீதியானதுமான விசõரணைகளில் இவர் குற்றமற்றவர் என நிரூபிக்கப்படுமானால் விடுவிக்கப்படுவார்.

No comments:

Post a Comment