Thursday, November 20, 2008

வன்னியில் முதலிரவு

முகம் மலர்ந்து தன் குழந்தையுடன்
வாசலில் கதலி வாழை
வந்தோரை வரவேற்கும் கும்பம்
சந்தனம் குங்குமம் கற்கண்டு
மங்களகரமாய் ஒலிக்கும்
மேளமும் நாதஸ்வரமும்
புன்னகையுடன் உற்றார் உறவினர்
சுபமுகூர்த்தத்தில் தாலி மணமளின் கழுத்தில் ஏறியது

தென்றலின் வருடல் மார்கழி இரவின்
குளிரை நினைவு படுத்த
தோழிகளின் கிண்டல்களுடன்
மணமகள் முதலிரவு அறைக்குள்ளே
நுழைந்தாள் மணமகள்

பல எதிர்பார்ப்புகளுடன் மாப்பிள்ளை
பால் செம்பை வைத்து விட்டு
மணமகனின் கால்களில் பணிந்தாள்
அவளை ஆசீர்வதித்து தூக்கி விடுவதற்காக
குனிந்தான் மணமகன்

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஹலொ "கிலோ ஸீரா பேஸ் சாளி ஓவர்"
அருகில் இருந்த தொலைதொடர்புகருவி அலறியது
ஓடி சென்று கைகளில் எடுத்தாள்
குழந்தை அழுதால் ஓர் தாயின் கவனிப்பாய்
சாளி ஓவர் சொலுங்கோ ஓவர்
அக்கா ஆமி மூவ் எடுக்க போறான் போல
உடன ரீமை அனுபுங்கோ ஓவர்
அவள் "அங்கே என்ன நடக்குது எண்டு லீமாக்கு
தெரியபடுத்துங்கோ ஓவர்".

அக்கா இங்கே இப்ப உடனே 15 பெட்டி சமாதானமும்
5 ஆமையும் வேணும் ஓவர்

அவன் வாற ரூட்டில பொன்னம்மானையும்
ராகவனையும் zig zag model இல வையுங்க ஓவர்
பின்னுக்கு போய் உங்கட கட் அவுட் ஜி பி ஸ் குடுங்கோ ஓவர்
முதலிரவு அறையே கட்டளைபீடமானது

அடுத்த நிமிடம்
களம் நோக்கி புறப்பாடு
மணமகளும் மணமகணும்

இப்போ வன்னியில்
திருமணம் கூட களத்திலேதான்
நிச்சயிக்கபடுகிறது !!!!!!!!!!!!!!!!!

No comments:

Post a Comment