
. ஆண்டுக்கு ஒரு முறை ராசிவிட்டு ராசி இடம் மாறும் குருபகவான், தன் பார்வை பலத்தால் கோடி நன்மை தருபவர். இந்த வருடம் 6.12.08 அன்று பகல் 11.15 மணிக்கு, தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியடையும் குருபகவான், எந்தெந்த ராசிக்கு என்னென்ன பலன்களைத் தரப்போகிறார்? தெரிந்துகொள்ளுங்கள்.
பணவரவு அதிகரிக்கும். சுப காரியத் தடைகள் விலகும். பூர்வீக சொத்து லாபம் தரும். வன்மமும் வஞ்சமும் தவிர்த்தால் வாழ்க்கையில் வசந்தம் வீசும். ஆடை, ஆபரணப் பொருள் சேரும். முடங்கிக் கிடந்த வர்த்தகம் முழுமை யாகச் சீராகும். வெளிநாட்டு வர்த்தகம் புது ஒப்பந்தங்களால் புத்துயிர் பெறும். மாணவர்கள் மதிப்பெண் அதிகம் பெற்று மதிப்பு உயரப் பெறலாம். கல்விக்கா அரசு, அரசியல் துறையினருக்கு ஆதாயம் அதிகரிக்கும். திடீர் பதவி, பொறுப்புகள் கிட்டும். திட்டமிட்டு செயல்பட்டால் கெட்டதெல்லாம் விலகும். பயணங்களில் வேகம் தவிர்ப்பதே விவேகம். செல்லும் வழியில் செல்போன் பேச்சு, கவனச் சிதறலும் அதனால் வாழ்க்கை சிதறவும் வழி வகுக்கும், கவனம். பெண்கள் பெரும் யோகம் பெறும் காலகட்டம். பொறுமைதான் பெருமைகளை நிலைக்கச் செய்யும். உடல்நலனில் அக்கறை உள்ளவர்கள் வாயைக் கட்டுப்படுத்துவது அவசியம். பசியை மறந்து ருசியை நினைத்தால் அஜீரணம் எல்லாப் பிணிகளுக்கும் பிள்ளையார் சுழி போடலாம்; எச்சரிக்கை அவசியம். வாரிசுகள் நலனிலும் கவனம் செலுத்துங்கள். பொதுவாக வாக்கில் இனிமை, சோம்பல் இன்மை, ஆரோக்கியத்தில் அக்கறை இருந்தால், இந்த குருபெயர்ச்சி, இருமடங்கு நன்மை தரும்.
பணியிடத்தில் பாராட்டும் பதவியும் தேடிவரும். உடனிருப்போர் ஆதரவு கிட்டும். யாரோ செய்த தவறுக்கு நீங்கள் பழி ஏற்ற நிலை மாறும். உங்கள் திறமைகள் வெளிப்பட்டு, உன்னதமும் உயர்வும் கிட்டும். திட்டமிட்டு செயல்பட்டால் எதிர்கால ஏற்றமும் இப்போதே நிச்சயமாகும். இல்லத்தில் இனிமை இடம்பிடிக்கும். வாழ்க்கைத் துணையால் வசந்தம் வீசும். வாரிசுகள் உடல்நலம் சீராகும். தாய்வழி உறவுகளிடம் தர்க்க வாதம் தவிர்த்தால், தடையில்லா நன்மைகள் கிட்டும். சுப செலவு அதிகரிக்கும். ஆடம்பரம் தவிர்த்தால் சே பெண்களுக்குப் பெருமைகள் நிச்சயம். சுபதடைகள் விலகும். கர்ப்பிணிகள் உரிய பரிசோதனையை ஒத்தி வைக்க வேண்டாம். ஆரோக்கியம் சீராக இருக்க தினமும் உடற்பயிற்சி அவசியம். முதுகுத் தண்டுவடமும், மூட்டுகளும் உபாதை தரலாம்; உடன் சிகிச்சை முக்கியம்.
அலுவலகப் பணி எதையும் அடுத்தவரை நம்பி ஒப்படைக்காமல் நேரடி கவனத்தில் செய்வது அவசியம். அன்றன்றைய வேலையை அன்றன்றே செய்து முடிப்பது நல்லது. இடமாற்றம் வந்தால் இன்முகத்தோடு ஏற்பதுதான் நன்மை. பணிச்சுமை அதிகரித்தாலும் பணிவோடு செய்தால், பதவி உயர்வு நிச்சயமாகும். கோப்புகளில் கையெழுத்துப் போடும்போது கோளாறு வராமல் இருக்க கவனமாக இருங்கள். இல்லத்தில் இனிமை இடம்பிடிக்க, இன்முகமும் இனிய பேச்சும் அவசியம். வாழ்க்கைத்துணை ஆலோசனையை அலட்சியப்படுத்தாமல் கேளுங்கள். மூத்தோர் சொல் முழுநன்மை தரும், உணர்ந்து செயல்படுங்கள். எதிலும் விட்டுக் கொடுத்துப் போனால் வீட்டில் அமைதி கெட்டுப் போகாமல் இருக்கும், ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். மாணவர்கள் சோம்பலை விரட்டினால் வெற்றிமேல் வெற்றி பெறலாம். திருமணத் தடை விலகும். எதிர்பார்த்து ஏங்கிய மகப்பேறு கிட்டும். தவறாத குலதெய்வ வழிபட்டால் கோடி நன்மை கிட்டும். முதலீட்டில் அவசரம் தவிர்ப்பது அவசியம். முயற்சியில் தளராது இருந்தால், செய்தொழில் செழிப்பாகும். வங்கிக் கடன் அட்டைகளில் அலட்சியம் தவிர்ப்பது அவசியம். சட்டப் புறம்பு சகவாசம் சீரழிக்கும், உடனடியாக விலகுவது உத்தமம். அரசு, அரசியல் துறையினர் பொறுமையும் நிதானமும் கடைப்பிடிப்பது அவசியம். பிறர் மீது குற்றம் சாட்டும் எண்ணம் உங்கள் குற்றத்தை ஊரறியச் செய்யும். பயணத்தில் வேகம், பாதை முடிவில் சோகம் ஆகிவிடலாம், பத்திரம். இரவுப் பயணம் தவிர்ப்பது அவசியம். சீரான பாதையில் சிற்றின்ப நாட்டம் சீரழிக்கும். தவிர்ப்பது அவசியம். பெண்கள் இரவல் நகை தவிர்ப்பதும், வீண் ஆடம்பரம் தவிர்ப்பதும் நன்மை தரும். வீண் விவாதம் தவிர்த்தால் வாழ்க்கையில் வசந்தம் வரும். அடுப்படியில் கவனச் சிதறல் தவிர்க்கவும். உடல்நலம் சீராக இருக்க, எளிதாக உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்ப்பது அவசியம். ரத்த அழுத்த மாறுபாடு, சர்க்கரை, பாதிப்புகளை உடன் கவனிப்பது உத்தமம். பொதுவாக, கவனமான செயல்கள், குழப்பமில்லாத தீர்மானங்கள் இவையே இந்த குரு பெயர்ச்சி காலத்தில் குறைவிலா நன்மை தரும். (குரு பெயர்ச்சி பலன்கள் தொடரும்) |
No comments:
Post a Comment