![]() |
எனினும், குறித்த கோரிக்கை தொடர்பில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் இதுவரையில் எவ்வித சாதகமான பதிலையும் அளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. ஓமந்தைச் சோதனைச் சாவடிக்கு முன்னால் உள்ள பகுதிகளில் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் காணப்படுவதனால் சோதனைச் சாவடியை இடம்நகர்த்த முடியாதென சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மீண்டும் ஓமந்தைச் சோதனைச் சாவடி மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மோதல்கள் இடம்பெறாதென உத்தரவாதம் அளிக்கப்பட்டால் மட்டுமே சோதனைச் சாவடியை முன்நோக்கி நகர்த்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - கண்டி ஏ9 பாதை வழியாக சாதாரண பொதுமக்களுக்கு போக்குவரத்து செய்ய முடியாத நிலை காணப்படுவதனால் ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு சோதனைச் சாவடியை இடம்நகர்த்துவது மிகவும் இன்றியமையாததென பாதுகாப்பு தரப்பு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கு அறிவித்துள்ளது. |
Wednesday, November 19, 2008
ஓமந்தைச் சோதனைச் சாவடியை முன்நோக்கி நகர்த்த ஐ.சீ.ஆர்.சீ மறுப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment