Tuesday, June 1, 2010

யுத்தக் குற்ற விசாரணை: ஐ.தே.க. எதிர்க்கிறது




இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஆலோசனை பெறு வதற்கு சர்வதேச நிபுணர்கள் குழு ஒன்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாய கத்தால் அமைக்கப்பட்டுகின்றமையை பிரதான எதிர்க்கட்சி என்ற ரீதியில் ஐக்கிய தேசிய கட்சி எதிர்க்கின்றது என்று அக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளு மன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
ஆனால், ஐக்கிய நாடுகளின் செயலாளர்
நாயகம் ஏன் இவ்வாறானதொரு நிபு ணர்கள் குழுவை நியமிக்க முயற்சி எடுத்துள்ளார் என்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி அவதானம் செலுத்தியுள் ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இவ்விடயம் குறித்து மேலும் அவர் கூறியவை வருமாறு
ஐக்கிய நாடுகள் சபை எமது உள் நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை ஐக்கிய தேசியக் கட்சி எதிர்க்கின்றது. அவர் இவ்வாறு நிபுணர்கள் குழு ஒன்றை நியமிப்பதற்கான காரணம் என்ன? அதா வது இலங்கை விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசு சிறந்த முறை யில் விளக்கம் அளிக்கவில்லையா? அந்த விடயத்தில் அரசு பலவீன மாக இருந்துள்ளதா என்று பார்க்க வேண்டும்.
அரசு இந்த விடயத்தில் என்ன செய்கின்றது என்று நாம் வினவுகின்றோம். ஐக்கிய நாடுகள் சபையின் முயற்சிக்கு ஆரம்பத்திலிருந்து அரசு எதிர்ப்பு வெளியிட்டு வந்தபோதிலும் ஐ.நா. அந்த விடயத்தை கைவிடவில்லை. ஆனால் இவ்வாறு உள்விவகாரங்களில் தலையிட இடமளிக்க முடியாது.
இப்படி ரவி கருணாநாயக்க கூறினார்.(ர)


No comments:

Post a Comment