Sunday, November 2, 2008

மனித உரிமைகள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளோம் - ஐரோப்பிய ஒன்றியம்


சிறீலங்காவில் மனித உரிமைகள் தொடர்பில் கூடுதான கவனம் செலுத்தியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐ.நா பொதுக்கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பொறுப்பிலுள்ள பிரான்ஸின் தூதுவர் பிரான்ஸ் தூதுவர் பிலிப்பே டெலக்ரொக்ஸ் தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் உரையாற்றும் போது:-

சிறீலங்காவில் மனித உரிமை நடவடிக்கைகள் மிகவும் மோசமடைந்து வருகி்ன்றன. யுத்த முன்னெடுப்புகளால் பொதுமக்களின் பாதுகாப்பு, பொதுமக்களின் நடமாட்டம், மனித உரிமை அமைப்புகளின் சுதந்திரமான செயற்பாடுகள் உறுதி செய்யப்பட வேண்டும்.

சிறீலங்காவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள், பயங்கரவாதத் தாக்குதல்கள் போன்ற விடயங்களை சிறீலங்கா சென்ற பிரான்ஸ் தூதுக்குழுவினர் இதனை ஆராய்ந்துள்ளனர்.

மனித உரிமை மீறல்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளை சிறீலங்கா அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக சிறீலங்காப் பிரதிநிதி கூறியுள்ளதாகவும் தெரிவித்த பிலிப்பே டெலக்ரொக்ஸ், மனித உரிமைகளைப் பாதுகாக்க சிறிறீலங்கா அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை ஊக்கம் அளிக்க வேண்டும்.

சிறீலங்காவில் இடம்பெறும் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பிலான விசாரணைகள் நீண்டு செல்வதாக அவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment