
இன்று வியாழக்கிழமை முற்பகல் 9.30 மணியளவில் விடுதலைப் புலிகளின் நிலைகள் நோக்கி எறிகணை மற்றும் கனரக ஆயுதங்களின் சூட்டாதரவுடன் இரு முனைகளில் சிறீலங்காப் படையினர் முன்னகர்வுகளில் ஈடுபட்டனர்.
படையினரின் முன்னகர்வுகளை வழிமறித்த போராளிகள் ஒன்றைரை மணி நேர முறியடிப்புச் சமரின் பின்னர் படையினரை பழைய நிலைகளுக்கு பின்வாங்கச் செய்துள்ளனர். இதன்போதே படையினர் தரப்பில் ஐவர் கொல்லப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment