Sunday, November 2, 2008

வான்புலிகளின் தாக்குதல் அச்சத்தினால் பதுங்கு குழிக்குள் ஓடிய மகிந்த



சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் வான் பரப்பில் வான்புலிகள் கடந்த செவ்வாய்க்கிழமை பறப்பினை மேற்கொண்ட போது தனது பாதுகாப்புக் கருதி சிறப்பாக அமைக்கப்பட்டிருந்த பதுங்கு குழிக்குள் சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பதுங்கியதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்த ஏட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

களனிதிச அனல் மின் உற்பத்தி நிலையத்தை கடந்த செவ்வாய்கிழமை வான்புலிகள் தாக்கிய போது கொழும்பின் பல பகுதிகளுக்கு மேலாக வான் புலிகள் பறப்பில் ஈடுபட்டிருந்தனர்.

எனவே வான்புலிகள் அரச தலைவர் மகிந்தவின் இல்லத்தை தாக்கலாம் என்ற அச்சம் கொழும்பை சூழ்ந்து கொண்டது.

இதனைத் தொடர்ந்து, அரச தலைவர் மகிந்த ராஜபக்ச சிறப்பாக அமைக்கப்பட்டிருந்த பதுங்கு குழிக்குள் பதுங்கிக்கொண்டதாக கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.

எனினும் இதனை அரச தலைவரின் வட்டாரங்கள் உறுதி செய்யவில்லை. ஆனால் அரச தலைவர், பாதுகாப்புக்காக சிறப்பு ஏற்பாடுகளைக் கொண்ட பகுதிக்கு நகர்த்தப்பட்டதாக அவை தெரிவித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment