Sunday, November 2, 2008

விழுப்புரத்தில் ஈழத் தமிழர்களின் துயரை வெளிப்படுத்தும் வகையில் காயக்கட்டு ஊர்வலம்



தமிழ்நாட்டில் விழுப்புரத்தில் ஈழத் தமிழர் துயரங்களை வெளிப்படுத்தும் காயக்கட்டு ஊர்வலம் இன்று சனிக்கிழமை மாலை 4:00 மணிக்கு நடைபெற்றுள்ளது.

இந்த ஊர்வலம் விழுப்புரம் கன்னியர் குளம் சாலையிலிருந்து புறப்பட்டு காந்தி சாலை காமராசர் சாலை திருவிக சாலை வஉசி சாலை வழியாக தொடருந்து நிலையத்தை சென்றடைந்தது.

வழி நெடுகிலும் ஏராளமான பொதுமக்கள் சாலையின் இருமருங்கிலும் நின்று, போரினால் ஈழ மக்கள் படும் துயரை வெளிப்படுத்தும் வகையில் காயக்கட்டுகளுடன் வந்தவர்களைக் கண்டு சிங்கள இராணுவத்தின் கொடுமைகளை குறித்து பேசிச் சென்றனர்.







இந்நிகழ்வில்

தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு

தமிழ் இளைஞர் கூட்டமைப்பு

தமிழ் இயக்கம்

பாவேந்தர் பேரவை

டிங்கர் சங்க தொழிலாளர் கூட்டமைப்பு

ஆசிரியர் கூட்டமைப்பு, தெருக்கூத்து கலைஞர்கள்

விழுப்புரம் பத்திரிகையாளர் மன்றம்

மனித உரிமை இயக்கம்

வீட்டு வேலைசெய்யும் பெண்கள் சங்கம்

நரிக்குறவர் நலச் சங்கம்

தமிழினத் தொண்டு இயக்கம்

மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி

பாட்டாளி மக்கள் கட்சி

விடுதலைச் சிறுத்தைகள்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்

கட்சிகள் மற்றும் அமைப்புக்கள் உள்ளிட பெண்கள், குழந்தைகள் என ஏறத்தாழ 700-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.






No comments:

Post a Comment