சிறீலங்கா அரசாங்கத்திற்கு அனைத்துலக நாணயநிதியம் உதவித்தொகை வழங்கியபோது நிபந்தனைகளின் அடிப்படையிலேயே வழங்கியிருந்தது. எனினும் சிறீலங்கா அரசாங்கத்தினால் அதன் நிபந்தனைகளை நிறைவேற்றுவதில் சிக்கல்கள் தோன்றியிருப்பதாக தெரியவருகிறது.

அனைத்துலக நாணயநிதியம் கடன்வழங்கும்போது வரவு செலவு திட்டத்தில் துண்டுவிழும் தொகையானது 2009 ம் ஆண்டு 7 விகிதமாகவும் 2010 ம் ஆண்டு 6 விகிதமாகவும் 2011ம் ஆண்டு 5 விகிதமாகவும் இருத்தல் வேண்டும் எனத்தெரிவித்திருந்தது.
ஆனால் 2009 ம் ஆண்டு வரவு செலவு அறிக்கையில் துண்டு விழும் தொகை 9.7 விகிதமாக அமைந்திருந்;தமை சுட்டிக்காட்டத்தக்கது. இதேவேளை மத்திய வங்கியின் ஆளுநர் டேவிட் கப்ரல் அவர்கள் 2010 ம் ஆண்டு துண்டுவிழும் தொகையினை 7.5 வீதமாக பேச்சுக்களின் மூலம் மாற்றி அமைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
நாணயநிதியமானது தாம் இதுவரை அரசுடன் பேச்சுவார்த்தை நடாத்தவில்லை எனவம் வரவு செலவு திட்டத்தில் துண்டுவிழும் தொகையினை முக்கிய காரணிகளில் ஒன்றாக தாம் கருதுவோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment