Monday, April 19, 2010

கபில்நாத் படுகொலை சந்தேக நபர்களின் மனுவை நிராகரித்தார் நீதிபதி


சாவகச்சேரியில் வர்தகர் மகன் கபில்நாத் படுகொலை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நான்கு சந்தேக நபர்கள் சமர்ப்பித்த பிணைமனு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

இவ்வழக்கானது சாவகச்சேரி நீதவான் பிரபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கை விசாரணை செய்து வரும் புலனாய்வுப் பொலிஸார் விடு முறையில் சென்றுள்ளதால் நேற்று அவர் கள் பிரசன்னமாக இருக்கவில்லை. அவர்களின் கருத்தைப் பெறாமல் பிணை வழங்க முடியாது எனத் தெரிவித்து பிணை மனுவை நிராகரித்து எதிர்வரும் 27ஆம் திகதி வழக்கை நீதிவான் ஒத்தி வைத்தார்.

ஏற்கனவே பிடியாணை பிறப்பிக் கப்பட்ட ஈ.பி.டி.பி. உறுப்பினர் ஜீவனுக்கு எதிரான உத்தரவு தொடர்ந்து நடை முறையில் இருக்கும் என்றும் நீதிவான் அறிவித்தார்.
அடுத்த தவணை புலனாய்வுப் பொலி ஸாரை நீதிமன்றத்தில் பிரசன்னமாக வேண்டும் என்றும் நீதிவான் உத்தர விட் டார்.

மாணவன் கடத்தல் தொடர்பாக ஏற்கனவே கைதுசெய்யப்பட்ட சாவகச் சேரி இந்துக்கல்லூரி மாணவர்கள் மூவ ரும், வவுனியாவில் வைத்துக் கைது செய் யப்பட்டுள்ள வவுனியா ஸ்ரீநாகராசா வித்தி யாசாலை ஆசிரியர் கணேஸ்வரராஜா தயாராஜூம் நீதிமன்றத்தால் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சார்பாகவே பிணை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment