Tuesday, April 27, 2010

நெதர்லாந்தில் விடுதலைப்புலிச் சந்தேக நபர்கள் கைது _







நெதர்லாந்து நாட்டில் தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பு குறித்து நடத்தப்பட்ட விரிவான ஆய்வுகளையடுத்து, அந்நாட்டின் தேசிய குற்றப் புலனாய்வு சேவை ஏழு பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

அதேவேளை, மேலும் 16 வீடுகள் மற்றும் வியாபார நிறுவனங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

இதன் போது கணினிகள், காகித ஆவணங்கள், தொலைபேசிகள், புகைப்படங்கள், டிவிடிக்கள் என்பன சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் இந்நடவடிக்கையின் போது 40,000 யூரோ பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பை ஐரோப்பிய ஒன்றியம் 2006 ஆம் ஆண்டு பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்த்தது.

நெதர்லாந்து நாட்டின் தேசிய குற்றப் புலானாய்வுப் பொலிசார் நடத்திய விசாரணைகளில் விடுதலைப் புலிகளுக்காக நிதிகள் சேகரிக்கப்பட்டமை குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் 2002 ஆம் ஆண்டின் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின்படி, அப்படியான அமைப்புக்களுக்கு நிதி மற்றும் பொருளாதார ஆதரவு வழங்குவது சட்டப்படி பொருளாதாரக் குற்றமாகக் கருதப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களா என்பது குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

No comments:

Post a Comment