_ | ||
![]() |
மீள்வாக்குப் பதிவு நடைபெறும் நாவலப்பிட்டிய மற்றும் கும்புறுபிட்டிய ஆகியவற்றின் தேர்தல் முடிவுகளை நாளை நள்ளிரவுக்கு முன்னர் வெளியிட எதிர்பார்க்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து கண்டி மாவட்டம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களின் முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும். அதன் பின்னர் நாடு முழுவதற்குமான தேர்தல் முடிவுகள் வெளியிடப்படவுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 22 ஆம் திகதி புதிய நாடாளுமன்றம் கூடவுள்ளதால் அதற்கு முன்னர் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்களின் பெயர்களை வர்த்தமாணி மூலம் வெளியிடுவதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக உதவித் தேர்தல்கள் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்
No comments:
Post a Comment