Sunday, April 18, 2010

நடப்பு சம்பியன் டெக்கான் அணிக்கு மீண்டும் அரையிறுதி வாய்ப்பு



டெல்லியில் நடைபெற்ற நேற்றைய 55ஆவது லீக் போட்டியில் கம்பிரின் டெல்லி டார்டெவில்ஸ் அணி, நடப்பு சம்பியன் கில்கிறிஸ்ட் தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணியை சந்தித்தது. இதில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் என்ற நிலையில் போட்டிகள் பலராலும் எதிர்பார்க்கப்பட்டது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெக்கான் அணித்தலைவர் கில்கிறிஸ்ட், முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.

இதேவேளை டெல்லி அணி வீரர்கள் வரிசையில் மாற்றம் எதுவும் இல்லை. டெக்கான் அணியில் ஆர்.பி.சிங்கிற்கு பதிலாக ஹரிஸ்,ஹர்மீட் சிங்கிற்கு பதிலாக வாஸ் ஆகிய இருவரும் இடம் பெற்றனர்.

டெக்கான் அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கில்கிறிஸ்ட் 10 , மோனிஷ் மிஸ்ரா 25 , சுமன் 5 , ரோகித் சர்மா 11 , சைமண்ட்ஸ் 54 , மார்ஷ் 13, பின்வந்த சுமன்ந்த் (7*), ராகுல் சர்மா (14*) என்ற ஓட்டங்களைப் பெற, டெக்கான் அணி, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 145 ஓட்டங்களைப் பெற்றது.

146 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்லி வீரர்கள் வார்னர் 5, சேவக் 8, டில்ஷான் 11 ,அணித்தலைவர் கம்பீர் 4 , மன்ஹாஸ் 23 , கார்த்திக் 1, கொலிங்வுட் (51*) அமித் மிஸ்ரா 4 , ஓட்டங்களையும் எடுத்தனர். இதன்படி டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 134 ஓட்டங்களை எடுத்து.

நேற்றைய போட்டியின் ஆட்டநாயகனாக சைமண்ட்ஸ் தெரிவு செய்யப்பட்டார். மேற்படி தோல்வியை தொடர்ந்து அரையிறுதிக்கான போட்டியில் இருந்து டெல்லி அணி வெளியேறியது.

எதிர் வரும் 22ஆம் திகதி மும்பையில் நடக்கும் இரண்டாவது அரையிறுதியில் டெக்கான் அணி, சென்னையை எதிர்த்து விளையாட உள்ளது.

No comments:

Post a Comment