இந்திய குழுவினரின் நேரடி கண்காணிப்பில் வவுனியா தாண்டிக்குளத்திலிருந்து ஓமந்தை வரை இன்னமும் அமைக்கப்படாதுள்ள மூன்று மைல் தூரம் கொண்ட புகையிரத பாதையை அமைப்பதற்கே இவர்கள் விஜயம் செய்துள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை மதவாச்சியில் இருந்து தலைமன்னார் வரையிலான புகையிரத பாதைகளை நிர்மானிப்பதில் ஏற்கனவே இந்திய நிறுவனம் ஒன்று ஆரம்பித்து வேலைகளை செய்து வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
இதன்பின்னர் ஒமந்தையில் இருந்து காங்கேசன்துறை வரையிலான புகையிரதபாதைகள் அமைக்கப்படவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
No comments:
Post a Comment