Sunday, April 18, 2010

இந்தியாவின் நேரடிப் பங்களிப்பு வடக்கில் துரிதமாக அதிகரிக்கும் தூதுவர் அசோக் காந்த் நேற்று அறிவிப்பு




வடமாகாணத்தில் நேரடியாகப் பல்வேறு உதவித் திட்டங்களில் இந்தியா ஈடுபடவிருக்கின்றது. இந்தியாவின் ஈடுபாடு வடக்கில் துரிதமாக அதிகரிக்கவிருக்கின்றமை தொடர்பான உறுதிமொழிகளை இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்த் நேற்று இங்கு வைத்துப் பகிரங்கமாக வழங்கினார்.
* இந்தியா செல்வதற்கான விசா விண்ணப்பங்களை ஏற்கும் நிலையம் எதிர்வரும் மே 5ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் திறந்துவைக்கப்படும்.
* பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் தூத்துக்குடி, சென்னை ஆகிய நகரங்களுக்கான விமான சேவைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும். * காங்கேசன்துறையில் இருந்து இந்தியத் துறைமுகங்களுக்கான கப்பல் சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* மதவாச்சியிலிருந்து யாழ்ப்பாணம் மற்றும் தலைமன்னாருக்கான ரயில் பாதைகளை அமைக்க இந்தியா நிதியுதவி வழங்கும். * போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மக்களுக்கான வீடுகளை அமைக்க இந்தியா உதவியளிக்கும்


இந்த உறுதிமொழிகளை நேற்று யாழ்ப்பாணத்தில் வைத்து அவர் வெளி யிட்டார்.
"யாழ்ப்பாணத்துக்கான உங்கள் நுழை வாயில்' என்னும் தொனிப்பொருளில் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ். மத்திய கல்லூரி யில் ஆரம்பமானது. யாழ்ப்பாணம் வர்த் தகக் கைத்தொழில் மன்றமும், வரைய றுக்கப்பட்ட இலங்கை கண்காட்சி மற் றும் மாநாடுகள் சேவைகள் தனியார் நிறு வனமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்தக் கண்காட்சியை இந்தியத் தூதுவர் அசோக் கே. காந்த் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு திறந்துவைத்தார்.
அதன் பின்னர் அங்கு நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றுகையிலேயே இந்தியத் தூதுவர் மேற்குறிப்பிட்ட அறி விப்புகளை விடுத்தார்.
கண்காட்சி புதிய மைல்கல்
அவர் தனதுரையில் மேலும் தெரிவித் தவை வருமாறு:
யாழ்ப்பாணத்தைப் பொறுத்தமட்டில் இந்த சர்வதேச வர்த்தகக் கண்காட்சி ஒரு புதிய மைல்கல். யாழ்ப்பாணம் ஒரு தரமான மனித வள மையம். அதற்கு இந்தக் கண் காட்சி பெரிதும் பயனுடையதாக அமையும்.
இலங்கையும் இந்தியாவும் நட்பு நாடுகள். அந்த நட்பை மேலும் வலுப் படுத்துவதற்கு இரு நாடுகளும் முயற்சிக் கின்றன. இந்தியா இலங்கைக்குத் தொடர்ந் தும் பல்வேறு உதவிகளை வழங்கி வரு கின்றது. பல்வேறு அபிவிருத்தித் திட்டங் களை அது இலங்கையில் முன்னெடுக் கின்றது. இலங்கையில் போர் முடிவுற்றதை அடுத்து ஆயிரத்து இருநூற்றியைம்பது கோடி ரூபாவுக்கான உதவிகள் வழங்கப் படுகின்றமை குறித்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கடந்த ஆண்டு அறிவித் திருந்தார்.
போரினால் பாதிக்கப்பட்ட வடபகுதி யைக் கட்டியெழுப்புவதற்கு இந்தியா பல வழிகளிலும் உதவியளித்து வருகின்றது. அத்துடன் யாழ்ப்பாணத்திலும் மேலும் பல அபிவிருத்திப் பணிகளை அது மேற் கொள்ளவுள்ளது.
யாழ்ப்பாணத்தில் அடுத்த மாதம் 5ஆம் திகதி இந்தியத் தூதரகத்தின் விசா விண் ணப்பங்களைக் கையேற்கும் நிலையம் திறந்து வைக்கப்படுகின்றது.
வடபகுதித் துறைமுகங்கள், விமான நிலையங்கள் என்பவற்றைப் புனரமைக் கவும் நிதியுதவி வழங்கப்படும்.
பலாலிக்கும் இந்திய நகரங்களுக்கும் இடையிலான விமான சேவைகள் விரை வில் ஆரம்பமாகும்.
காங்கேசன்துறையிலிருந்து இந்தியத் துறைமுகங்களுக்கிடையேயான கப்பல் சேவைகளும் ஆரம்பிக்கப்படும்
இந்தியக் கம்பனிகள் யாழ்ப்பாணத் தில் முதலீடு செய்ய ஊக்குவிக்கப்படும்.
போரினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங் களிலும் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக் கப்படும்.
தலைமன்னாருக்கும் ராமேஸ்வரத்துக் கும் இடையே கடல் வழிப் போக்குவரத் தும் ஆரம்பிக்கப்படும்.
இந்த சர்வதேச கண்காட்சி யாழ்ப்பாணத் துக்குப் புதியதொரு ஆரம்பம். இலங்கை யின் பொருளாதார மையங்களில் யாழ்ப் பாணமும் முக்கியமான தொன்றாகிவிட் டது. எமக்கிடையே உள்ள நட்புறவை மேலும் வளர்த்துக்கொள்ள இந்தக் கண் காட்சி பெரிதும் உதவும். என்றார்.
இந்த சர்வதேச கண்காட்சியில் பல இந்தியக் கம்பனிகளும் பங்குபற்றுகின் றன.

No comments:

Post a Comment