Saturday, April 24, 2010

நித்யானந்தாவிடம் துருவித் துருவி விசாரணை நித்யானந்தாவிடம் துருவித் துருவி விசாரணை

பெங்களூர் : பிடதி ஆசிரமத்தில் நடந்த பாலியல் முறைகேடு, நன்கொடை மோசடிகள் பற்றி நித்யானந்தாவிடம் சி.ஐ.டி. போலீசார் நேற்று துருவித் துருவி விசாரித்தனர். பெரும்பாலான கேள்விக்கு அவர் புன்னகையை மட்டுமே பதிலாக தந்தார்.
பாலியல் பலாத்காரம், நிதி மோசடி உட்பட பல புகார்களில் சிக்கியுள்ள சாமியார் நித்யானந்தாவை கர்நாடக சி.ஐ.டி. போலீசார் இமாச்சல பிரதேசத்தில் கைது செய்தனர். நேற்று முன்தினம் மாலை விமானத்தில் அவரை பெங்களூருக்கு அழைத்து வந்தனர். மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு ராம்நகரம் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி புஷ்பவதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவரை 4 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார். இதைத் தொடர்ந்து, பெங்களூர் பேலஸ் சாலையில் உள்ள சி.ஐ.டி. அலுவலகத்துக்கு போலீசார் அவரை அழைத்துச் சென்றனர். நீண்ட பயணம், சோர்வில் இருந்ததால் இரவில் அவரை விசாரிக்கவில்லை.
நேற்று காலை அவருக்கு உணவு கொடுத்ததும், மீண்டும் தூங்கச் சென்றார். மாலை 4 மணிக்குதான் எழுந்தார். பின்னர் அவரிடம் விசாரணை தொடங்கியது. போலீசார் அவரிடம் சரமாரியாக கேள்விகள் கேட்டனர். அவற்றில் சில வருமாறு:
றீ உங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கிறீர்களா? ஏற்கிறீர்களா?
றீ 45 நாட்களாக எங்கு இருந்தீர்கள்?
றீ இமாச்சல பிரதேசத்துக்கு எப்போது சென்றீர்கள்?
றீ அங்கு உங்களுக்கு கிளை ஆசிரமம் உள்ளதா?
றீ உங்களுடன் தொடர்பு வைத்துள்ள பிரமுகர்கள் யார், யார்?
றீ நடிகை ரஞ்சிதா உடனான உங்கள் உறவு எப்படிப்பட்டது? காதலியா? பக்தையா?
றீ உங்கள் மீது கூறப்படும் பாலியல் புகார்கள் உண்மைதானா?
றீ எத்தனை வெளிநாடுகளில் உங்களுக்கு தொடர்பு இருக்கிறது?
றீ அங்கெல்லாம் எத்தனை கிளைகள் இருக்கின்றன?
றீ உங்கள் வருமானத்துக்கு கணக்கு இருக்கிறதா?
றீ ஏராளமான சொத்துகள் எப்படி வந்தன?
றீ உங்களின் ஆரம்ப கால வாழ்க்கை எப்படி இருந்தது?
றீ பக்தர்களை எப்படி கவர்ந்தீர்கள்?
& இதுபோல் ஏராளமான கேள்விகளை போலீசார் துருவித் துருவி கேட்டனர். அவற்றில் பெரும்பாலான கேள்விக்கு புன்னகையை மட்டுமே பதிலாக உதிர்த்தார் நித்யானந்தா. தனது ஆரம்ப கால வாழ்க்கை பற்றிய சில தகவல்களை அவர் கூறி இருக்கிறார். 10 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருக்கு வந்து தங்கிய இடம், யார் யாருடன் தொடர்பு ஏற்பட்டது, பிடதியில் ஆசிரமம் தொடங்க உதவியது யார் போன்றவற்றுக்கு அவர் பதில் அளித்து இருக்கிறார். முதல் நாள் விசாரணை இத்துடன் முடிந்துள்ளது. இன்னும் 3 நாட்கள் விசாரணை நடக்க உள்ளது. அதில், குற்றச்சாட்டுகள் பற்றிய உண்மைகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை ரூ.150 கோடியை வாரியிறைத்தார் பக்தர்கள் கொடுத்த பணம் திரும்ப கிடைக்குமா?

நித்யானந்தா நிகழ்ச்சிக்கு வருபவர்ககளிடம், சாதாரணமானவராக இருந்தால் ஆயிரம், இரண்டாயிரம்; விஐபிக்களாக இருந்தால் கோடிக் கணக்கில் வசூலித்துள்ளனர். அவர் மீது உள்ள பக்தியால் நிலங்களையும் தானமாக வழங்கியுள்ளனர். அவரை கடவுளாக பக்தர்கள் மதித்ததால் கேட்டதையும், கேட்காததையும் அள்ளிக் கொடுத்தனர். அதனால் நித்யானந்தாவிடம் பணமும், சொத்தும் குவிந்தது. ரூ.1000 கோடியில் இருந்து 1500 கோடி ரூபாய் வரை அதன் மதிப்பு இருக்கும் என்பது அவரது சீடர் சொல்லும் தகவல்.
இப்போது சாமியார் கைது செய்யப்பட்டதோடு, பெண் பக்தர்களுடன் செக்ஸ் ஒப்பந்தம் செய்துள்ள தகவலும் வெளியானதால், அவரை நம்பி நன்கொடை கொடுத்த பக்தர்கள் கொந்தளித்துப் போய் உள்ளனர். பலரும், போலீஸ் அதிகாரிகளை தொடர்பு கொண்டு தாங்கள் கொடுத்த பணம், நிலம் ஆகியவை திரும்ப கிடைக்குமா என்று கேட்டு வருகின்றனர். பலர் அவர் மீது புகார் கொடுக்க தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீசில் நித்யானந்தா மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விசாரணை நடத்த ஓரிரு நாளில் தமிழக போலீசார் பெங்களூர் செல்ல திட்டமிட்டுள்ளனர். இது குறித்து சென்னை போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘’சாமியார் நித்யானந்தாவிடம் நன்கொடையாக பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் தைரியமாக புகார் கொடுக்கலாம். அதன் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். புகார் கொடுப்பவர்களின் பெயர் ரகசியமாக வைக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.
நித்யானந்தா தலைமறைவாக இருந்தபோது, கைதாகாமல் இருக்க, அவருக்கு உதவி செய்வதாக கூறி பலர் முன்வந்தனர். சிக்கலில் இருந்து வெளியே வந்தால் போதும் என்று, அவர்களை நம்பி பணத்தை வாரியிறைத்துள்ளார் சாமியார். இந்த விவகாரத்தில் இருந்து தப்பிக்க, இதுவரை அவர் ரூ.150 கோடி செலவு செய்ததாக, அவரது முன்னாள் சீடர் லெனின் கருப்பன் குற்றம் சாட்டியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையிலும் நித்யானந்தாவிடம் போலீசார் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment