
ஒருமித்த இலங்கைக்குள் தீர்வுத்திட்டம் தொடர்பாக கலந்துரையாடத் தயாராக இருக்கின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளமையை அரசு வரவேற்றுள் ளது.
கொழும்பில் அமைந்துள்ள மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும இக்கருத்தை வெளியிட்டார்.
தமிழ்த் தரப்பிலிருந்து கடந்த 30 40 வருடங்களில் கிடைக்கபெற்ற சிறந்த சமிக்ஞை இதுவெனத் தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளா ளர் டலஸ் அழகப்பெரும, அவர்களுடன் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்துமாறு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார் என்றும் குறிப்பிட்டார்.
பூட்டானில் நேற்று ஆரம்பமாகிய சார்க் சம்மேளன மாநாடு நிறைவடைந்த பின்னர் இந்தக் கலந்துரையாடல்கள் ஆரம் பிக்கப்படும் என்றும் யுத்தம் கொழுந்து விட்டு எரிந்த நாட்டில் மீண்டும் யுத்தம் நடைபெறாத பின்னணியை ஏற்படுத்த வேண்டியது எமது அனைவரினதும் பொறுப்பு என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் அங்கு கூறியவை வரு மாறு
எதிர்வரும் காலங்களில் ஸ்ரீ லங்கா சுதந் திரக் கட்சி பொதுத்தேர்தல்களில் வெற்றிபெறக் கூடாது என்பதற்காகவே ஜே.ஆர்.ஜெயவர்தன 1977ஆம் ஆண்டு விகிதா சார முறையிலான தேர்தலை அரசமைப் பின் மூலம் உருவாக்கினார்.
அன்று அவர் ஐக்கிய தேசியக் கட்சி அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றிபெற வேண்டும் என்ற கனவுடனேயே இதனை உருவாக்கியது.
ஆனால் அவர், அன்று கண்ட கனவு இன்று பலிக்காமல் போய்விட்டது. அரச மைப்பின் மூலம் விகிதாசாரத் தேர்தல் முறையை அறிமுகப்படுத்தியதன் பின் னர் நடைபெற்ற 6 பொதுத்தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு 4 தடவைகள் வெற்றிபெற்றுள்ளது.
ஆக ஐக்கிய தேசியக் கட்சியானது 1989 ஆண்டும், 2000 ஆம் ஆண்டும் நடை பெற்ற பொதுத்தேர்தல்களில் மாத்திரமே வெற்றி பெற்றது. இதன் மூலம் ஜே.ஆர். ஜெயவர்தன அன்று கண்ட கனவு பலிக் காமல் போய்விட்டது என்றார்
No comments:
Post a Comment