Sunday, April 25, 2010

பிள்ளையானின் கட்சியின் கீழ் இயங்கும் உள்ளூராட்சி சபைகள் குறித்து விசாரணை

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவ னேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையா னின்) தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் நிர்வாகத்தின் கீழ் உள்ள உள் ளூராட்சி சபைகளில் இடம்பெற்றுள்ளவை எனக் கூறப்படும் ஊழல்கள், முறைகேடுகள் தொடர்பாக அரசு விசாரணைகளை ஆரம் பித்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜ யவிக்கிரம இதனை உறுதி செய்துள்ளார்.
நிதி முறைகேடு, அரச வாகனங்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை, சட்ட விரோத நியமனங்கள் போன்ற குற்றச்சாட் டுகளைத் தொடர்ந்தே இந்த விசாரணை கள் ஆரம்பமாகியுள்ளன. கணக்காய்வு விசாரணையும் இடம்பெறுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண சபைக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சில குறித்தும் அரசு விசா ரணைகளை ஆரம்பித்துள்ளது.
தென்கொரியாவிற்கு அனுப்புவதாக சுமார் ஆயிரம் பேரிடம் பணம் வசூலித்த பின்னர் அவர்களை அந்த நாட்டிற்கு அனுப்பாதமை, கணனி கொள்வனவில் மோசடி போன்ற குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணைகள் இடம்பெறுகின்றன

No comments:

Post a Comment