Sunday, April 18, 2010

நாமல்ராஐபக்ஸவின் வருகையை எதிர்த்து போராட்டம் நடாத்தியோர் கைது


சென்னை விமான நிலையத்திற்கு ஊhடாக சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்கு இந்தியா சென்ற நாமல்ராஐபக்ஸ அவர்களின் வருகையை எதிர்த்து சுமார் நூற்றுக்கணக்கான தமிழ் ஆர்வலர்கள் சென்னை விமான நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து சென்னை காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை கைது செய்துள்ளதாக தெரியவருகிறது.

முன்னதாக ஜனாதிபதியின் புதல்வர்கள் இருவரும் சென்னை விமானநிலையத்தை அடைவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் இறுதிநேரத்தில் அவர்கள் வெளியில் வரவில்லை. ஆனால் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதாக கூறப்பட்ட 50 காவற்துறை அதிகாரிகள் அங்கு பிரசன்னமாகியிருந்தனர். இந்த நிலையில் அவர்கள் வருவது தொடர்பான தகவலை அறிந்த பெரியார் திராவிட கழக போராளிகள் விமான நிலையத்தின் நுழைவாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களில் 10 பேர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டனர். எனினும் பிந்திக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அவர்கள் சென்னை விமானநிலையத்தின் உறுப்பினர் விடுதியில் தங்க வைக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து டெல்லிக்கு மற்றுமொரு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிய வருகின்றது.

எனினும் இரவு 8 மணியளவில் இவர்கள் மீளவும் சென்னை விமானநிலையத்திற்கு வரலாம் என மற்றுமொரு தகவல் வெளியானது. இதனையடுத்து அங்கு மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த போராளிகள் குவிந்திருந்தனர். எனினும் அவர்கள் சென்னை விமானநிலையத்தின் உள்ளக விமான சேவை மூலம் டெல்ல சென்றுள்ளதாக தெரிய வருகின்றது.

No comments:

Post a Comment