Tuesday, April 20, 2010

வடக்கு கிழக்கு பகுதியில் இருந்து படையினர் விலக்கிகொள்ளப்படமாட்டார்கள்


தமிழ்தேசியக்கூட்டமைப்பினர் படையினரை வடக்கு கிழக்கு பகுதியில் இருந்து விலக்கி கொள்வது தொடர்பாக கேட்க்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே படையினரை தாம்ஒருபோதும் அங்கிருந்து விலக்கிக்கொள்ளமாட்டோம் என தெரிவித்துள்ளனர்.

திருகோணமலையில் ததேகூ கூட்டத்தில் வடக்கு கிழக்கு மக்கள் வழங்கிய ஆணைக்கு அரசாங்கம் மதிப்பளிக்கவேண்டும் எனதெரிக்கப்பட்டிருந்தது.

எனினும் அரசு தமிழ்தேசியக்கூட்டமைப்பு தேர்தல் விஞஞாபனத்தில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைய ஒருபோதும் நிறைவேற்றப்போவதில்iலை எனவும் வடக்கு கிழக்கில் இராணுவம் நிலைகொள்வது குறித்து அரசாங்கமே முடிவு எடுக்கும் அரசாங்கத்தின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், இரா.சம்பந்தன் இதற்கு முன்னரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்து, வடக்கு கிழக்கில் இருந்து இராணுவத்தினரை விலக்கிகொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தாகவும் அதனை ஜனாதிபதி நிராகரித்திருந்தாகவும் திவயின தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment