Thursday, April 22, 2010

48 மணி நேரத்தில் முடிவுற்ற கடத்தல் நாடகம் இருவரையும் கொலைசெய்து புதைக்கத் தயார்! பொலிஸாரின் அதிரடி வேட்டையில் சிக்கினர் மூவர்!!





மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையினால் கடந்த செவ் வாய்க்கிழமை காலை கடத்திச் செல்லப் பட்ட இளம் குடும்பஸ்தர் ஒருவரும், இளை ஞர் ஒருவரும் கொலை செய்யப்பட் டுக் குழியில் புதைக்கப்பட விருந்தவேளை, 48 மணி நேரத்திற்குள் குருநகரி லுள்ள ஒரு வீட்டிலிருந்து மீட்கப் பட்டனர். பொலிஸா ரின் தீவிர முயற்சியினாலும் சாதுரியத்தா லும் கடத்தல் கோஷ்டியைச் சேர்ந்த குரு நகரைச் சேர்ந்த மூவரும் கைது செய்யப் பட்டனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை காலை மோட் டார் சைக்கிளில்சென்று கொண்டிருந்த ஆனைக்கோட்டையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான மகேந்திரன், நவாலியைச் சேர்ந்த 24 வயதுடைய மகேஸ்வரன் ஆகிய இருவரும் காலை 8 மணியளவில் யாழ்ப்பாணத்திலுள்ள மாதா கோயிலுக்கு அருகில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்களால் கடத்திச் செல்லப்பட்டிருந்தது தெரிந்ததே.
கடத்தப்பட்ட இருவரையும் விடுதலை செய்தவதற்கு 70 இலட்சம் ரூபா தரவேண்டும் என்றும், பணம் தரமறுக்கும் பட்சத்தில் இருவரும் கொலை செய்யப்படுவார்கள் என்றும் கடத்தல்காரர்கள் குடும்பஸ்தரின் மனைவியையும், வாலிபரின் பெற்றோரையும் பல தடவைகள் தொலைபேசி மூலம் மிரட்டியிருந்தனர்.
இக்கடத்தல் கப்பம் சம்பவம் குறித்து மானிப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து தீவிர விசாரணையில் ஈடுபட்ட பொலிஸார் கடத்தல் காரர்களைக் கையும் மெய்யு மாகப் பிடிப்பதற்கான யுக்திகளை மேற் கொண்டிருந்தனர்.
குடும்பஸ்தரையும் வாலிபரையும் கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்பதற் காகக் குறிப்பிட்ட ஒரு தொகை பணத்துட னும், தங்க நகைகளுடனும் வாலிபரின் தந்தை நேற்றுக் காலை (வியாழக்கிழமை) கடத்தல்காரர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்து சென்றார்.
இதேவேளை கடத்தல் காரர்களைக் கையும் மெய்யுமாக மடக்கிப் பிடிப்பதற்கான சகல ஒழுங்குகளையும் மேற்கொண்ட மானிப்பாய் பொலிஸார் குறிப்பிட்ட இடங் களில் சாதாரண சிவில் உடையில் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
பணத்துடன் யாழ். கோட்டைக்கு அருகில் குறிப்பிட்ட இடத்திற்கு வருமாறு தொலைபேசியில் தெரிவித்த கடத்தல்காரர்கள் பின்பு இடங்களை மாற்றிமாற்றிக் கூறிவந்தனர். இறுதியாகச் சொன்ன இடத்திற்கு வாலிபரின் தந்தை பணத் துடன் சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரையும் அங்கு மறைந்திருந்த பொலிஸார் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து குடும்பஸ்தரும், வாலிபரும் மறைத்து வைக்கப்பட்டிருந்தவீட்டிற்குச் சென்ற பொலிஸார் அங்கு மேலும் ஒருவரைக் கைது செய்ததுடன், இரு அறைகளில் தனித்தனியே சங்கிலியால் கால்களையும், கைகளையும் கட்டியி ருந்த இருவரையும் மீட்டனர்.
இவர்களை மறைத்து வைத்திருந்த வீட்டிற்குப் பின்புறத்தில் இவர்களைப் புதைப்பதற்காக ஆழக்குழி ஒன்றும் வெட்டப்பட்டிருந்ததைப் பொலிஸார் கண்டுபிடித்தனர். மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் குறித்து பொலிஸாரும், பாதுகாப்புப் படை யினரும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
மானிப்பாய் பொலிஸாரின் சாதுரிய மான அதிரடியான நடவடிக்கை குறித்து குடாநாட்டு மக்கள் வந்து பாராட்டுத் தெரிவிக்கின்றனர். அவர்களின் கடமை உணர்வை மெச்சிப் பேசிக்கொள்கின்றனர்.

No comments:

Post a Comment