Wednesday, April 21, 2010

சிறீலங்காவின் ஐரோப்பிய செயல்ப்பாடுகள் சுவீடன் நீதிமன்றத்தில் வெளிச்சத்துக்கு வந்தது

"ஏஷியன் ட்ரிபியூன்" வலைத்தளத்தில் வந்த சில குறிப்பிட்ட கட்டுரைகள் அவதூறுகளைப் பரப்பியதாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு சுவீடன் நீதிமன்றத்தில் ஏப்ரல் 15 அன்று விசாரிக்கப்பட்டுள்ளது. குறித்த கட்டுரைகளின் உரிமையாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு எதிராகவே இவ்வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

"ஏஷியன் டிரிபியூன்" கட்டுரைகளில் இழிவாக விவரிக்கப்பட்ட நபர் இலங்கையிலிருந்து செயற்படுவதாகக் கூறப்படும் 40 க்கும் மேற்பட்ட ஆயுதக் குழுக்களால் விடப்பட்ட அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டதாக வாதாடிய வக்கீல் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த "ஏஷியன் ட்ரிபியூனின்" ராஜசிங்கம், தனது வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்ட அந்த நபரை அடையாளம் கண்டது இலங்கை புலனாய்வுச் சேவைகள் என்றும், அச்சேவைகளின் வேண்டுகோளுக்கு இணங்கவே அந்த கட்டுரைகள், செய்திகள் பிரசுரிக்கப்பட்டன என்றுத் தெரிவித்தார்.

ராஜசிங்கம் தெரிவித்த கருத்துக்களின்படி, அமைச்சர்கள், போலீஸ் அதிகாரிகள் மற்றும் பொதுச் சேவையாளர்கள் என்று பலருமே அந்த வலைத்தளத்தின் 90 வீதத்துக்கும் அதிகமான செய்திகளை வழங்கியுள்ளனர் என்று தெரிகிறது. மேற்படி நபரை அடையாளம் காட்டியது புலனாய்வாளர்கள் என்பதால் அவர் இலங்கை திரும்பினால் கைதுசெய்யப்படலாம் என்றும் ராஜசிங்கம் கூறியுள்ளார்.

இவ்வழக்கின்மூலம், இலங்கைக்கு வெளியேயுள்ள நபர்களை அடையாளங்கண்டு, இழிவுபடுத்த இலங்கை புலனாய்வாளர்கள் ஐரோப்பாவிலுள்ள மக்களைப் பயன்படுத்துகின்றனர் என்பது தெளிவாகியுள்ளது. எனவே அந்த நபர்கள் இலங்கை திரும்பும்போது அவர்களைக் கொல்லவும் அவர்கள் தயார்நிலையில் இருப்பர்கள் என்பதும் தெளிவு. எனவே மேற்படி நபர் இலங்கைக்கு வரும்போது அவருக்கு ஏதேனும் ஆபத்து நிகழந்தால் அதற்கு இலங்கை அரசுதான் பொறுப்பு எனவும் சட்ட ஆய்வாளர்கள் கருத்துக்கூறியுள்ளனர்.

மேற்படி வழக்கின் தீர்ப்பு வருகின்ற மே மாதம் ஆறாம் திகதி வழங்கப்படும்.

No comments:

Post a Comment